உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

மருமக்கள்வழி மான்மியம்

குச்சா கிலும்நீர்[1] கொடுத்ததும் உண்டோ? 15
ஆண்டு தோறும் ஆதா யத்தில்
ஆயிரம் ரூபாய்க் கையம் இல்லையே!
ஏழாண்டாக இந்த மிச்சம்
எங்கே போச்சுது? என்னடா, அப்பா!
கேட்பாரில்லையோ, கேள்வியு மில்லையோ! 20
நெட்டர மாவும் நெடுங்கண் வயலும்[2]
யாரிடம் கேட்டுநீர் ஈடு கொடுத்தீர்?
கடனுக் கென்ன காரணம்? சொல்லும்.
ஊரில் காரிய விசாரம் உமக்கு
வேண்டாம் என்றேன்; 'விடுவனோ' என்றீர். 25
கணக்கன்[3] உமது கழுத்து முறிய
எல்லரச் சுமைகளும் ஏற்றிவைத் ததனால்,
அம்மன் வகைக்கீ [4]ராயிரம் ரூபாய்
தெண்ட மிறுத்த கதைதெரி யாதோ?
உச்சிக் கொடைக்குப்[5] பிச்சி வெள்ளையும் 30
கொழுந்தும் தாழம் பூவும் கொண்டு
வரவில்லை யென்றுநீர் வைரவன் மகனை
எட்டி யடித்த ஏதுவி னாலே,


  1. 15. குச்சு - காதிலணியும் ஒரு சிறு ஆபரணம்.
  2. 21. நெட்டரமா, நெடுங்கண் வயல்: வயற்பெயர்கள்.
  3. 28. கணக்கன் - சமுதாய வரவு செலவுகளை எழுதுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த கணக்கப்பிள்ளை.
  4. 28. அம்மன் வகை -ஊருக்குப் பொதுவான தேவி கோவிலைச் சேர்ந்த சொத்து.
  5. 30-32. உச்சிக்கொடை - சிறு தெய்வங்களின் கோவில்களில் உச்சி வேளையில் நடத்தும் விசேஷ் ஆராதனை. இதற்குப்
    பிச்சிப்பூ முதலிய பூக்களை ஊர் வேலைக்காரர் கொண்டு வருவது வழக்கம்.