இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7. கருடாஸ்திரப் படலம்
என்று மருமகன் இயம்பிய மொழிகளை
மாமன் கேட்டு, மனமிக நொந்து,
"நல்ல தப்பா! நாகாஸ் திரங்கள்
இத்தனை தானோ? இனிவே றுண்டோ?
உன்னைச் சொல்ல ஒருகுறை யில்லை.
5
கலியன் முற்றின காலமி தல்லவோ?
என் மாமனார் இறந்து வருஷம்எட்டாக
யான்படும் பாடெலாம் யாரே அறிபவர்!
நாலாண் டாக நல்ல விளைவிலை;
செலவு கழிந்ததே தெய்வச் செயலாம்;
10
அடைமழை யாலே அழிந்ததோர் வருஷம்;
வெயிலின் கொடுமையால் வெந்ததோர்
போன ஆண்டில் பொலியே இல்லை. [வருஷம்;
கொக்குநோய்[1] விழுந்து குடியைக் கெடுத்தது;
கார்விளை வில்லை, பசானம் கரிந்தது;[2]
15
விளைவிலை யாயினும் வீட்டுச் செலவில்