உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கருடாஸ்திரப் படலம்

67

ஒருகுறை யேனும் உண்டோ? அப்பா!
பிள்ளைப் பேறும் பிறந்த நாளும்
இல்லா வருஷம் இல்லையே, அப்பா!
குடும்பச் செலவுகள் கூறி முடியுமோ? 20
ஒன்றா? இரண்டா? ஒன்பதா? பத்தா?
ஆண்டு தோறும் ஆலடி மாடன்[1]
கொடைக்கு ரூபாய் கொஞ்சமா செல்லும்?
போன கொடைக்குப் புதிதாய் வந்த
வில்லுக் காரி[2] வீரம் மைக்கு 25
நாலு சேலையும் ரூபாய் நாற்பதும்
கொடுத்தது நீயும் கூடி யல்லவா?
எனக்கு,
சல்லடம் கச்சை தைக்க மாத்திரம்
ஐம்பது ரூபாய் ஆச்சுதே, அப்பா! 30
போக்கில் லாத பயல்களைப் போலத்
துணியை அரையில் சுற்றிக் கொண்டு
நானும் ஆடினால் நன்றா யிருக்குமா?
காரணவன் என்றொரு கணிசம்வேண் டாமா?
பிலே![3] 35
சன்னதி முன்னே தறித்த கடாவுக்கு
இருபது ரூபாய் எண்ணிவைத் தேனே!
நீங்கள்,
அப்பன் மக்கள் அனைவரும் இங்கே


  1. 22. ஆலடி மாடன் கொடை -ஆலமரத்தினடியிலுள்ள மாடன் என்னும் சிறு தெய்வத்துக்குச் செய்யும் சிறப்பு.
  2. 25. வில்லுக்காரி: வில்லுப் பாட்டுப் பாடுபவள். வில்லுப் பாட்டுப் பாடும் ஆண்களைப் புலவனார் என்று அழைத்து வருகின்றனர்.
  3. 25. பிலே - பயலே