இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கருடாஸ்திரப் படலம்
69
முரசு வாத்திய முழக்க மில்லையா?
என்ன இல்லை என் தாய்க் கப்பா?
தோசை ஆயிரம் சுட்டு மூலையில்
ஆசை தீரவைத் தழுத தில்லையா?
60
பத்துச் சாக்குப் பயறும் ஒன்றாய்
அடுத்த கிழமையில் அவிக்க வில்லையா?
தேங்காய்,
இரண்டா யிரத்துக் கதிகம் எடுத்து
வீடு வீடாய் விளம்ப வில்லையா?
65
பதினா றன்று, பார்ப்பார்க் கெல்லாம்,
பட்டுக் குடையும் பாத ரட்சையும்
கட்டிலும் மெத்தையும் கடுக்கன்மோ திரமும்
பாயச பாத்திரம் பஞ்சபாத் திரமும்[1]
அமுது படியும் அளிக்க வில்லையா?
70
மேலும்
பசுவும் கன்றும், பத்து மரக்கால்
நிலமும்,[2] தானம் நெறிதவ றாமல்
செய்ய வில்லையா? தினமும் வெற்றிலைச்
செலவும் உனக்குத் தெரியா தோடா?
75
படிப்புரை[3] யருகில் வைத்த படிக்கம்
பத்திர காளி பலிபீ டம்போல்
ஆனதை நீயும் அறியா யோடா?