இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
70
மருமக்கள்வழி மான்மியம்
பத்துப் பெண்கள் பட்டினி கிடந்து
பருத்திப் பொதிபோல் பதினா றாம்நாள்
80
வெளியில் வந்திட வேண்டு மானால்.[1]
அவர்,
எத்தனை தோசை இட்டலிக் கெல்லாம்
ஏம காலரா யிருப்பார்? அப்பா!
இட்ட செலவெலாம் எடுத்துச் சொன்னால்
85
எண்ணி முடியுமா? எழுதி முடியுமா?
சிதம்பரக் கட்டளை, செந்திற் கட்டளை,
மதுரைக் கட்டளை[2] வகைக்கொரு பூவில்
எண்பது கோட்டை[3] நெல்லில் உழக்குக்
- ↑ 78-81. யாராவது ஒருவர் மரணமடைந்தால் இறந்தவருடைய பந்துக்களில் சில பெண்கள் பதினாறு நாளும் பட்டினி கிடப்பார்கள். இந்தப் பட்டினிக் காலத்தில் சோற்றைத் தவிர மற்றெல்லாப் பண்டங்களையும் உபயோகிப்பதில் ஆட்சேபணையில்லை. ஆதலால் சில பெண்கள், பண்டம் பலகாரம் ஏராளமாகத் தின்னலாமென்ற எண்ணத்தோடு,
பட்டினி கிடப்பதுண்டு. அவர்களைப் பதினாறு நாளும் கழிந்த
பிறகு பார்த்தால், அவர்களுடைய உடம்பு பட்டினியால்
மெலிந்திராது; முன்னையிற் பார்க்கிலும் பருமனாக இருக்கும்; பெயரளவில் தான் பட்டினி; ஆகாரம் மற்றக் காலங்களைப் பார்க்கிலும் அதிகமரயிருக்கும்; பருத்திப் பொதி-பஞ்சு மூட்டை. - ↑ 87-88. கட்டளை: கோவிலுக்கு ஒரு விசேஷங் குறித்து ஏற்படுத்தப்பட்ட தருமம். சிதம்பரம், மதுரை, திருச்செந்தூர் ஆகியவை தமிழ் நாட்டில் மிகப் பிரசித்தி பெற்ற தேவாலயங்கள். இங்கெல்லாம் வருடந்தோறும் தருமத்தின்
பொருட்டுக் கொடுத்துதவ எண்பது கோட்டை நெல் வேண்டும் என்கிறார் காரணவர். - ↑ 89. கோட்டை: இருபத்தொரு மரக்கால் கொண்ட
முகத்தல் அளவை; பட்டணம் படிக்கு எழுபத்தைந்து படி.