இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
90
மருமக்கள்வழி மான்மியம்
ஈதெனச் சொல்ல எவரால் ஆகும்!
செல்லும் செலவு செய்திட, ரூபாய்
65
நூற்றைம் பதுக்கோர் நோட்டு,[1] வக்கீல்
மைத்துனன் முத்து வாத்தியார் பேருக்கு
எழுதி முடித்தார்; எடுத்து வந்த
ஆதா ரங்கள் அனைத்தும் கொடுத்தார்;
இவரிவர் சாக்ஷிகள் என்றும் சொன்னார்;
70
வெள்ளை மடத்துக் கள்ள பிரானெனும்[2]
மூத்த பிள்ளையே[3] முதலாம் சாக்ஷி;
மாத்தால் கணக்கு[4] மகரா சன்மகன்
பிச்சைக் காரன் பின்னொரு சாக்ஷி;
இருக ணில்லா இருளப் பன்மகன்
75
முத்தொளி மறவன் மூன்றாம் சாக்ஷி;
ஐயம் பிள்ளை அண்ணாவி[5] புதல்வன்
நல்ல பிள்ளை நாலாம் சாக்ஷி;
பொய்சொலா மெய்யன் புத்திரன் மாறி
யாடும் பெருமாள்[6] ஐந்தாம் சாக்ஷி.
80
- ↑ 66. நோட்டு - பிராமிசரி நோட்டு என்னும் கடன் பத்திரம்.
- ↑ 71. வெள்ளை மடம்: நாகர் கோவிலை யடுத்த ஓரூர். கள்ளபிரான் - அங்குள்ளார் ஒருவரின் பெயர்.
- ↑ 72. மூத்தபிள்ளை: நாஞ்சில் நாட்டு வேளாளரில் தகுதியுடையவருக்குத் திருவிதாங்கூர் மன்னரால் முன்பு அளிக்கப்பட்டு வந்த ஒரு பட்டம்.
- ↑ 73. மாத்தால் - நாகர் கோவிலுக்கு ஆறு மைல் வடக்கிலுள்ள ஓரூர். கணக்கு - மூத்தபிள்ளை ஸ்தானம் உடையவர்கள் பெயரோடு 'கணக்கு' என்று இணைத்தெழுவது வழக்கம்.
- ↑ 77. அண்ணாவி - உபாத்தியாயர்.
- ↑ 79-80. பொய் சொலாமெய்யன், மாறியாடும் பெருமாள்: இவை பெயர்கள்.