இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
96
மருமக்கள்வழி மான்மியம்
விளாத்திக் கோண[1] விவகார மல்லவோ?
175
எத்தனை வகையை[2] இழந்தார், அப்பா!
மூக்கறை யன்விளை[3] மூலையில் நிற்கும்
பலாமர மொன்றுமே பத்துக் குடும்பம்
தாங்கி, மீதியும் தருமே, அப்பா!
அந்த
180
மதினி கழுத்தில் மங்கிலியம் தவிர
எல்லா நகையும் இறக்கி விட்டாளே!
ஒவ்வொரு காதிலும் உழக்குழக் குப்பொன்
இட்டிருந் தாளே! எல்லாம் போச்சே!
ஆளும் வேற்றாள் ஆகி விட்டதே!
185
கருந்தாளி உலக்கை[4] கையில் எடுத்து அவள்
கோவில் நெல்லைக் குத்துவாள் என்று
யாவ ராயினும் எண்ணினது உண்டா?
என்ன செய்வாள், ஏழை! பாவம்!
நட்டியும் குட்டியும் நாழியும் உழக்குமாய்[5]
190
ஏழு மக்களை எப்படி வளர்ப்பாள்?
கோர்ட்டு வழக்குக் கொஞ்சமா செய்யும்?
இதுவும் செய்யும், மேல் எதுவும் செய்யும்:
கட்டுக் கட்டாய்க் காய்கறி யனுப்பவும்,
- ↑ 175. விளாத்திக் கோணம்: ஒரு கோணத்தின் பெயர்; கோணம் - ஒருவருக்கு உரிமையான பல நிலங்கள் அடுத்தடுத்து ஒரு சேகரமரகக் கிடக்கும் பகுதி.
- ↑ 176. வகை - வஸ்து, சொத்து.
- ↑ 177. மூக்கறையன் விளை - ஒரு புன்செய் நிலம்.
- ↑ 186. கருந்தாளி உலக்கை: கருந்தாளி மரத்தால் செய்தது.
- ↑ 190. அதிக காலம் இடையீடில்லாதபடி அடுத்தடுத்துப் பல குழந்தைகள் பிறந்திருந்தால், அவற்றை நட்டியும்
குட்டியும் நாழியும் உழக்கும்' என்று நாஞ்சில் நாட்டில்
சொல்வதுண்டு.