பக்கம்:மர இனப் பெயர்த் தொகுதி 1.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மிகுதியான சொற்களைக்‌ கொடுத்துள்ளது. மற்ற நிகண்டுகள்‌ காட்டாத கூந்தற்‌ கமுகையும்‌ சில நிகண்டுகள்‌ கூறாத புளிமா, தேமா போன்றவற்றையும்‌ இது விட்டு விடாமல்‌ தொகுத்துள்ளது. சில சமயம்‌ தனக்கு மூன்‌ வந்த நூலைவிட இது இரு மடங்கு எண்ணிக்கையுள்ள சொற்களைச்‌ சேர்த்துள்ளது. இந்தான்கு நிகண்டுகளில்‌ பின்னருள்ள கயாதரத்தில்‌ மற்றெல்லா நிகண்டுகளைவிடச்‌ சொற்களின்‌ எண்‌ணிக்கை குறைவாக உள்ளது. இவற்றைக்‌ காணும்போது தமிழில்‌ மர இனப்‌ பெயர்‌களின்‌ தொகுப்பு சொல்‌ வளர்ச்சியையும்‌ அதற்குரிய காரணங்களையும்‌ ஆறிதற்கு வாய்ப்புத்தரும்‌ என்பதை உணரமுடியும்‌.

மேனாட்டார்‌ வரவால்‌ நிகண்டுகளின்‌ பயிற்சி குறைந்து அகராதிகள்‌ வளரத்‌ தொடங்கின. நிகண்டுகளிலும்‌, மக்கள்‌ வழக்கிலுமுள்ள சொற்களை இவ்வகராதிகள்‌ தொகுத்தன. பொது அகராதிகளில்‌ மர இனப்‌ பெயர்கள்‌ மற்ற சொற்களின்‌ இடையில்‌ அகர நிரல்படி அமைந்திருக்கும்‌.

ஆனால்‌ மர இனப்‌ பெயர்களைத்‌ தனியே தொகுக்கும்‌ முயற்சி சென்ற நூற்‌றாண்டில்‌ தொடங்கியது. 'வைத்தியக்‌ கண்ணாடி' என்ற நூலில்‌ மருந்துச்‌ செடிகளின்‌ பெயர்களைத்‌ தமிழ்‌, வடமொழி, பாலி, சிங்களம்‌ எனப்‌ பல மொழிச்‌ சொற்களில்‌ தொகுத்து ஃபன்சேகா என்பவர்‌ கொழும்பில்‌ 1873-இல்‌ வெளியிட்டார்‌. கிளெமெண்ட்‌ தாருதி என்பவர்‌ மரீசியசு போன்ற நடுவண்‌ உலகப்‌ பகுதிகளில்‌ உள்ள மருந்துச்‌ செடிகளின்‌ பெயர்களைத்‌ தமிழ்‌, இலத்தீன்‌, இந்தி ஆகிய மொழிச்‌ சொற்‌களில்‌ தொகுத்து 1886-இல்‌ வெளியிட்டார்‌. இராசகோபால பிள்ளையின்‌ 'ஆங்கில-கர்னாடக வைத்திய சிந்தாமணி (1889) இவ்வகையில்‌ துணைபுரியும்‌ நூல்‌ என்பர்‌.

சென்னை மாகாணத்தில்‌ வளரும்‌ பயிர்களின்‌ பெயர்களை வேளாண்மைத்‌ துறை தமிழ்‌ உட்பட்ட தென்னக மொழிகளிலும்‌ பிறமொழிகளிலும்‌ 1892-இல்‌ வெளியிட்டது. இதனை ஒட்டி ஆல்பிரடு லூசிங்டன்‌, சென்னை மாகாணத்திலுள்ள மரஞ்‌ செடி கொடிகளின்‌ பெயர்ப்‌ பட்டியலை மிக விரிவாக வெளியிட்டுள்ளார்‌. இதில்‌ தமிழ்ப்‌ பெயரையும்‌ அதற்குரிய தாவா இயல்‌ இரட்டைப்‌ பெயரையும்‌ குறிப்பிட்‌டுள்ளார்‌. இதனால்‌ குறிப்பிட்ட மர இனத்தை நன்கு கண்டறிய இயலும்‌.

தமிழகத்தில்‌ காணும்‌ தாவாங்கள்‌ பற்றிய செய்திகளைப்‌ பொதுமக்களும்‌ அறிஞர்களும்‌ அறியும்‌ வகையில்‌ பி. எல்‌. சாமி, கு. சீனிவாசன்‌ போன்றவர்கள்‌ கட்டுரைகளும்‌ நூல்களும்‌ எழுதிவந்தனர்‌. சித்த மருத்துவத்துறையில்‌ சாம்பசிவம்‌ பிள்ளை வெளியிட்ட தாவர இயற்‌ பெயர்களின்‌ களஞ்சியம்‌ (1988) தனிச்‌ சிறப்‌புடையது. 'கலைக்கதிர்‌', 'மூலிகை மணி' போன்ற இதழ்கள்‌ ஓரளவு குறிப்பிடத்‌ தக்கவையாகும்‌.

மர இனப்‌ பெயர்களின்‌ சிறப்பையுணர்ந்து இத்துறையின்‌ தலைவராய்‌ முன்னர்‌ விளங்கிய பேராசிரியர்‌ சுந்தர சண்முகனார்‌ பல நிகண்டுகளிலுள்ள