பக்கம்:மர இனப் பெயர்த் தொகுதி 1.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மரப்பெயர்கள்‌ பல்வேறு வடிவிலும்‌ பொருளிலும்‌ பயன்‌ பட அச்‌ சொற்களின்‌ எண்ணிக்கை பல்கிப்‌ பெருகியது. அவற்றையெல்லாம்‌ அறிந்து பயன்படுத்தும்‌ வகையில்‌ திவாகரம்‌ எனும்‌ முதல்‌ நிகண்டு முதல்‌ முயற்சி செய்துள்ளது. இதன்‌ நான்காம்‌ பகுதி மரப்பெயர்த்தொகுதி. அகக்காழ்‌, புறக்காழ்‌ எனத்தொல்கரப்பியம்‌ கண்ட நிலையின்‌ வளர்ச்சியாக அவற்றை முறையே ஆண்மரம்‌, பெண்மரம்‌ எனவும்‌ சுட்டியது. அத்துடன்‌ "முருக்கு நார்பால்‌ மரமுதலாயின வேறு அலிமரம்‌ எனும்‌ விகற்பம்‌ பெறுமே” எனக்‌ கூறும்போது இருவகைப்படுத்திய நிலை மூவகையானதைக்‌ காண்கிறோம்‌.

பிங்கல நிகண்டில்‌ மரப்பெயர்வகை அந்நூலின்‌ ஒன்பதாம்‌ தொகுதியாக மாறியுள்ளது. சமயச்‌ சார்பான கருத்துக்களின்‌ வளர்ச்சிநிலை மரப்‌ பெயர்களை நூலமைப்பில்‌ பின்னே வைக்கச்‌ செய்தது. மரங்களிலும்‌ சந்தனம்‌, தேவதாரம்‌ போன்ற ஐந்து மரங்கள்‌ தெய்வமரம்‌ என்ற உயர்வு பெற்று முதலிடம்‌ பெறுவதையும்‌ காணலாம்‌. மூங்கிலின்‌ பெயராக 'வெதிர்‌' முதல்‌ 'சபம்‌' ஈறாக 37 பெயர்களைத்‌ தொகுத்துத்‌ தரும்‌. மரங்களில்‌ பூவாது காய்க்கும்‌ மரங்கள்‌ பற்றியும்‌ மருந்தாகப்‌ பயன்படுவன பற்றியும்‌ மரப்‌ பொதுப்‌ பெயர்கள்பற்றியும்‌ கூறும்‌. மரத்தின்‌ உறுப்‌புக்கள்‌, மரம்‌ சேர்ந்துள்ள நிலை ஆகியன குறித்துக்‌ கூறிப்‌ பின்‌ செடி, கொடி, புல்‌வகைப்‌ பெயர்களை விரிவாகக்‌ கூறும்‌. மலர்களால்‌ தொடுக்கப்பெறும்‌ பலவகை மாலைகளையும்‌ இடத்திற்கேற்ப இணைத்துள்ளது.

சூடாமணி நிகண்டெனும்‌ புகழ்‌ பெற்ற நிகண்டில்‌ மரப்‌ பெயர்த்‌ தொகுதி தான்காம்‌ இடத்தில்‌ அமைந்துள்ளது. இத்தொகுதியில்‌ மொத்தம்‌ 924 பெயர்கள்‌ உள்ளன. ஆயினும்‌ அத்தனையும்‌ மரப்பெயர்கள்‌ அன்று. 191 மரஞ்‌ செடி கொடிப்‌ பெயர்களுக்கு ஒரு பொருட்‌ பல பெயர்கள்‌ 458 உள்ளன.

மரப்‌ பெயரோடு தொடர்புடைய கனி, காய்‌ போன்ற உறுப்புப்‌ பெயர்கள்‌, மரங்‌ கொடிகளுக்குரிய பொதுப்‌ பெயர்கள்‌, தளிர்த்தல்‌ போன்ற இவற்றோடு தொடர்புடைய தொழிற்‌ பெயர்கள்‌, மரக்கூட்டத்தின்‌ கூட்டப்‌ பெயர்கள்‌, காடுகளின்‌ பல்வேறு பெயர்கள்‌, இவற்றால்‌ செய்யும்‌ மருந்துகள்‌, கட்டும்‌ மாலைகள்‌ ஆகியவற்றிற்குரிய பெயர்கள்‌ 90 உள்ளன. அவற்றிற்கு ஒரு பொருட்‌ பல பெயர்கள்‌ 2179 உள்ளன.

இவற்றைக்‌ காணும்போது மரப்பெயர்த்‌ தொகுதியில்‌ அவற்றின்‌ பல்வேறு நிலை, செயல்‌, பயன்பாடு ஆகியவற்றைக்‌ கருத்தில்கொண்டு அவற்றிற்கும்‌ பயன்‌பட்ட பெயர்களைத்‌ தொகுத்த நோக்கம்‌ புலப்படுகிறது.

திவாகரம்‌, பிங்கலந்தை, சூடாமணி, கயாதரம்‌ ஆகிய நிகண்டுகளில்‌ காணும்‌ 29 மரப்‌ பெயர்களை ஒப்பிட்டுக்‌ காணும்போது கீழ்க்காணும்‌ முடிவுக்கு வர முடிகிறது. குங்குமம்‌, நெல்லி, கற்பக்கொடி போன்றவற்றின்‌ பெயர்கள்‌ மாறாமல்‌ அவ்வாறே கூறப்‌ பெற்றுள்ளன. மற்ற மூன்று நிகண்டுகளைவிடப்‌ பிங்கலந்தை