பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மர இனப் புள்ளுகள் (பறவைகள்) மிகும் புதுவருவாயையுடைய அத்தன்மைத்து - என்பது பழைய உரைப்பகுதி. மலைபடு கடாம் என்னும் நூலிலும் இச் செய்தி தரப்பட்டுள்ளது: " கோடுபல முரஞ்சிய கோளி ஆலத்துக் கூடுஇயத் தன்ன குரல்புணர் புள்ளின்நாடு' (268-69) என்பது பாடல் பகுதி. கொம்புகள் பலவும் முற்றிய பழத்தைத் தன்னிடத்தே கொண்டதாகிய ஆலமரத்திடத்தே கூடின பல வாச்சியங்களை ஒத்த பல ஒசையுங் கூடின. பறவைத் திரளையுடைய நாடு' - என்பது நச்சினார்க் கினியரின் உரைப் பகுதி. 'மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந்தழைப்பார் யாவருமங் கில்லை (29) என்னும் நல்வழிப் பாடற் செய்தியிலும் ஆலமரத்திற்கு நிரம்பப் பங்கு உண்டு. 3-2 இலக்கியச் சான்றுகள: இனி, பழுமரம் என்னும் பெயருடன் வெளவாலையோ - மற்ற பறவைகளையோ இணைத்துக் கூறியுள்ள இலக்கிய அகச் சான்றுகள் சில வருமாறு: குறுந்தொகை - 172: " தாஅ வஞ்சிறை கொப்பறை வாவல் பழுமரம் படரும் பையுள் மாலை'. புறநானூறு - 173: * யார்ைப் பழுமரம் புள்ளிமிழ்ந் தன்ன'. பொருத ராற்றுப் படை - 64: பழுமரம் உள்ளிய பறவையின்',. பெரும்பா னாற்றுப்படை - 20: " பழுமரம் தேரும் பறவை போல’. 63 பெயர்வைப்புக் கலை மணிமேகலை - 14 - 26; பழுமரத்து ஈண்டிய பறவையின் எழுஉம்'. சிவக சிந்தாமணி: " புள் பயில் பழுமரப் பொலிவிற்று'. (93) " பார்கெழு பழுமரப் பறவை”. (828) தொல் களவு -23-நச்சினார்க்கினியரின் மேற்கோள் பாடல் பகுதி: பையுள் மாலைப் பழுமரம் படரிய கொவ்வுப் பறை வாவல் கோன்சிறை'. இதுகாறுங் கூறியவற்றால், பழுமரம் என்னும் பெயர் ஆல மரத்திற்குச் சாலப் பொருந்தும் என்பது தெளிவு. க். காலப் பண்பால் பெற்ற பெயர்கள் : 4-1,2 தொன்மையும் முதுமையும்: ஆல மரம் சில நூற்றாண்டு காலம் தொடர்ந்து வாழக் கூடியதாதலின், அதற்குத் தொன்மையான - பழமையான மரம் என்னும் பொருளில் தொன் மரம்' என்னும் பெயரும், பொருளில் 'முது மரம் என்னும் முதிய மரம் என்னும் இப்பெயர்களை அறிவிக்கும் பெயரும் சூட்டப்பட்டுள்ளன. இலக்கிய அகச்சான்றுகள் சில வருமாறு: " தூங்குகிற வாவலுறை தொன்மரங்கள் என்ன’’ (சீவக சித்தாமணி-498) ' பாய தொன்மரப் பறவைபோல்” (திருவிளையாடல் புராணம்-திருநகரப் படலம்-67) ' கொழுமென் சிறைய கூருகிர்ப் பறவை... பகலுறை முதுமரம் புலம்பப் போகும்’ (குறுந்தொகை-352)