பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் பதிப்பு: மே, 1990. உரிமை: ஆசிரியர்க்கே ബ്ഞ് രൂ. 18-0U് அச்சிட்டோர்: சபாநாயகம் பிரிண்டர்ஸ் இழவீதி, சிதம்பரம் ஆசிரியர் முன்னுரை தமிழ் நிகண்டு நூல்களில், தாவரம் பற்றிய பகுதிக்கு மரப் பெயர்த் தொகுதி என்னும் பெயர் வழங்கப் பெற்றுள்ளது. எனவே, தாவரம் என்பதற்கு மர இனம்” என்னும் பெயர் இந்நூலில் தரப்பட்டுள்ளது. சில ւDքr இனப் பெயர்கள், புதுமையாகவும் கவர்ச்சியாகவும் சுவை யாகவும்-மறைபொருள் உடையனவாகவும் உள்ளன. அவற்றுள் பல பெயர்கட்கு உரிய பெயர்க் காரணங்கள் அடியேனால் ஆய்வு முறையில் விளக்கப்பட்டுள்ளன. அரிதின் முயன்று, நெடுநேரம் எண்ணி எண்ணிப் பல பெயர்க்காரணங்கள் கண்டுபிடித்துத்தரப்பெற்றுள்ளன. இப் பெயர்கள் முன்னோர்களால் சூட்டப்பட்டிருப்பது, பெயர் வைப்புக்கலை’ என ஒரு கலையாகச் சொல்லும் அளவுக்குச் சிறப்பிடம் பெற்றுள்ளது. எனவே தான், இந்நூலுக்கு மர இனப் பெயர் வைப்புக்கலை" என்னும் பெயர் சூட்டப் பெற்றுள்ளது. இந் நூலில் பெயர்க் காரண விளக்கம் பெற்றுள்ள பெயர்கள் பல்வேறு வகை நூல்களிலிருந்து எடுக்கப் பெற்றவை. - இந்நூலை வெளியிட ஒரளவு பொருளுதவி புரிந்துள்ள புதுவை அரசுக் கல்வித் துறைக்கு மிக்க நன்றி செலுத்து கிறேன். இந்நாலை நன் முறையில் அச்சிட்டு உதவிய சபாநாயகம் பிரிண்டர்ஸ் உரிமையாளர்க்கு எனது நன்றி உரியது. வழக்கம்போல் இந்நூலுக்கு ஆதரவு அளிக்கும்படி அனைவரையும் பணிவுடன் வேண்டுகிறேன். சுந்தர சண்முகன் 霍2一空一篮势9母