பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i28 1ՇDr இனப் ' முது கண்டகி யிவளாம் அசமுகி என்பதொர் கொடியவன்" (கந்த புராணம் - அசர காண்டம் - அசமுகிப் படலம்-41.2) ப்ொதுவாகக் குரு என்பதற்குப் புண் எனவும், கண்டகம் என்பதற்குப் புண்ணுக்குக் கொடுமை செய்வது அதாவது . புண்ணைப் போக்குவது எனவும் ஈண்டும் பொருள் கொள்ள லாம். துன்பத்துக்குத் துன்பம் செய்வர். அதாவது - துன்பத் திற்கு இடங்கொடாதவர் என்னும் பொருளில் உள்ள , இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்' (623) என்னும் குறளின் கருத்தைப் போல், குரு கண்டகம் என்ப தையும் கொள்ளவேண்டும். அதாவது, முருங்கை, புண் - சொன் போன்ற நோய்களைப் போக்கும் என்பது கருத்து. க. ச. முருகேச முதலியார் தம் பொருட் பண்பு நூலில் இதுபற்றிக் கூறியிருப்பன: முருங்கை இலையோடு, இரண்டு திரிப்பூண்டு, ஒரு துண்டு மஞ்சள், உப்பு, மிளகு இவைகளைச் சேர்த்தரைத்து. நாய்க்கடி தஞ்சை முரிக்க, உள்ளுக்குக் கொடுத்து, அதனையே புன் னின் மீதுப் பற்றிட புண் ஆறி, நஞ்சு நீங்கும் . - 'முருங்கைப் பட்டைச் சாறு, குப்பை மேனிச்சாறு இவ்விரண்டையுஞ் சேர்த்து எண்ணெய் விட்டுக் காய்ச்சி, கரப்பான் சொறி சிரங்குகளின் மீது தடவ அவை நீங்கும்'. முருங்கைப் பிசினை எண்ணெயில் கரைத்துக் காதில் விடக் காதுப் புண் ஆறும் . பெயர்வைப்புக் கலை இவ்வாறு புண் - சொறி போன்றவற்றைப் போக்குவ தால், முருங்கைக்குக் குரு கண்டகம் என்னும் பெயர் கொடுக்கப்பட்டது என்று கூறலாம். 4-1-2. இரண்டாம் வகை: இனி, குரு என்பதன் மற்றொரு வகைப் பொருளாவது:தேவ குருவாகிய வியாழனுக்குக் குரு' என்னும் பெயர் உண்டு. சோதிடத்திலும், வியாழன் என்னும் பெயரினும் குரு என்னும் பெயரையே பெரும்பாலும் பயன்படுத்துவர். இந்தக் குரு பகவானுக்குப் பொன் என்னும் பெயரும் உண்டு. இலக்கியச் சான்று:

  • பொன்னொடு வெள்ளியும் புரந்த ராதியர்க் கின்னியன் முறைமுறை யிருக்கை பீயவே' (கம்பராமாயணம் - ஆரணியம் - மாரீசன்வதை – 16) பொன் என்பது குருவைக் குறிப்பதன்றி, உலோகங்களையும் குறிக்கும். சிறப்பாகத் தங்கத்தையும் பொதுவாக உலோகங் களையும் பொன் எனல் மரபு, தங்கம் செம்பொன், பசும் பொன், பைம்பொன் என்றெல்லாம் வழங்கப்படும்.

' செம்பொன் விளக்கொடு சேடியர் முந்துற' (பெருங்கதை - உஞ்சைக் காண்டம் - 33-189) ' செந்நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை' (மதுரைக்காஞ்சி - 410), நச்சினார்க்கினியர் உரை: சிவந்த நீர்மையுடைய கிளிச்சிறை என்னும் பொன்னால் செய்த பாவை. ' செங்கீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த கெடியோன்' (புறநானூறு - 9 9, பழைய உரை: சிவந்த நீர்மையை யுடைய போக்கற்ற (பழுதற்ற) பசிய பொன்னைக் கூத்தர்க்கு வழங்கிய நெடியோன்').