உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறக்க முடியுமா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 யார் பிடியிலும் அடங்காமல் நான் ஆடிய “பேயாட்டம்” கண்டு வீட்டிலே இருந்தவர்கள் எனக்கென்னமோ ஆகி விட்டது என்று அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். இவ்வளவுக்கும் குழந்தை கண் விழித்துப் பார்க்கவில்லை. கை கால்கள் கழுத்து தலை வரையில் வெட்டி வெட்டி இழுப்பதும் நிற்கவில்லை. உள்ளூர் மருத்துவர் இன்னொருவர் வந்தார். அவரும் உதட்டைப் பிதுக்கி விட்டார். இரண்டு முறை நான் மயக்கமுற்று மூர்ச்சித்தேன். இதற்கிடையே பக்கத்து ஊர் - மூன்று நான்கு கல் தாலைவிலே திருவாய்மூர் என்ற ஊரிலே இருந்து ஒரு வைத்தியர் அழைத்து வரப்பட்டார். அவர் குழந்தையை நன்றாகப் பரிசோதித்து விட்டு: "பயப்படுவதற்கு ஒன்றுமில்லை” என்று எங்களை யெல்லாம் தேற்றினார். உடனே போய் வேப்பெண்ணெய் வாங்கி வரச் சொன்னார். முதல் வேப்பெண்ணையை குழந்தையின் உச்சி உள்ளங்கால் வரையில் தடவினார். அரைமணி நேரத்திற்கெல்லாம் அந்த இழுப்பும் வலிப்பும் நின்று, குழந்தை கண்விழித்துப் பார்க்கவே - “பயப்படாதிங்க; இது கணை என்ற ஒரு வியாதி குழந்தைகளுக்கு வர்ரது சகஜம் தான்!” என்று வைத்தியர் சொல்லி எங்கள் முகத்தில் புன்னகையை வரவழைத்தார். - மறுநாள் குழந்தை, விளையாடக் கிளம்பிவிடவே; என் தாயார் என்னைப் பிடிவாதமாக இழுத்துக் கொண்டு போய் எங்கள் குல தெய்வம் குஞ்சம்மா பெரியம்மாவிடம் நிறுத்தி;