12 ஆத்திரத்திலே அந்தம்மாவை திட்டியதற்காக மன்னிப்பு கேட்க வைத்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு எத்தனையோ ஆண்டுகள் கடந்து அறிஞர் அண்ணா எழுதிய வேலைக்காரி திரைப்படத்தில் ஆனந்தன் என்ற கதா பாத்திரம் (கே.ஆர். ராமசாமி) - அவன் மிகவும் பக்தி செலுத்திய காளியம்மன், அவன் தரித்திரத்தைப் போக்கவில்லை என்ற கோபத்தில் அம்மனின் பூஜைப் பொருள்களையெல்லாம் வாரி இறைத்து ஆலயத்தில் ஆவேசமாக அம்மனையே வசைமாரி பொழிகிற காட்சியைக் கண்ட போது; எனக்கு மாறனின் குழந்தைப் பருவ நோயும் - நான் எங்கள் குல தெய்வத்தின் முன்னால் ஆத்திரத்தில் பேசிய பேச்சும் ஆவேசமாக நடந்து கொண்டதும் நினைவில் நிழலாடின. அளவுக்கு மீறி அன்பும் பக்தியும் வைத்து விட்டால்; ஏமாற்றமடையும் போது; அது தெய்வமாகவே இருந்தாலும் அதைத் திட்டத் தான் தோன்றும் என்பதற்கு எடுத்துக் காட்டாக அமைந்த அண்ணாவின் வேலைக்காரி திரைப்படக் காட்சி எனக்கும் பொருந்துவது போலிருந்தது மாறனின் குழந்தைப் பருவ நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டதால்! திருக்குவளையில் ஆரம்பப் பள்ளி படிப்பு முடிந்து திருவாரூர் பள்ளியில் நான் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த விடுமுறையைக் கழிக்க என் சொந்த ஊரான திருக்குவளைக்கு ஒரு முறை சென்றிருந்தேன். திருக்குவளை பள்ளி மாணவர் சங்க ஆண்டு விழாவில் துருவன் நாடகம் போது
பக்கம்:மறக்க முடியுமா.pdf/19
Appearance