நடத்த ஏற்பாடாகியிருந்தது. 13 அதில் இந்திரனாக நடிக்க இருந்த பையனுக்கு நாடகத்தன்று திடீரெனக் கடுமையான காய்ச்சல். வேறு வழியில்லை. பழைய மாணவனாகிய நான் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய நெருக்கடிக்கு ஆளானேன். இந்திரனுக்குரிய 99 வசனங்களை நானே எழுதிக் கொண்டேன். வசனங்கள் எல்லாமே “குடியரசு" வாடை தான். நாரதர் என்னைப் பார்த்து "ஹே இந்திரா! பூலோகத்தில் ஒரே குழப்பம்! நீ 27 இந்திராணியோடு கொட்டமடிக்கிறாய்! இது தான் உன் ராஜ்ய பரிபாலனத்துக்கு அழகோ?” என்று ஆத்திரத்தோடு கேட்டார். உடனே இந்திரன், "ஆமாம், இது தான் என் ராஜ்ய பரிபாலனத்தின் அழகு, இலக்கணம் எல்லாமே! நான் இந்திராணியோடு கொட்டமடிக்காமல் வேறு யாரோடு கொட்டம் அடிப்பேன் ? அகல்யாவிடம் கொஞ்சியதற்குத் தான் உடம்பெல்லாம் கண்களாகிப் போகுமாறு சாபம் பெற்றுவிட்டேன். ஒரு கண் இரண்டு கண் இருக்கும் தேவர்களே காதல் வியாதியால் கஷ்டப்படும்போது ஆயிரம் கண்ணுடைய நான் நான் எ என்ன செய்வேன் ?” என்று பதில் கூறுவான். இப்படியொரு புதுமையான இந்திர வேஷத்தைப் போட்டுக் கொண்டேன். அந்த நாடகத்தில் துருவனாக நடித்தது நவநீதகிருஷ்ணன்; துருவனுடைய தம்பியாக நடித்த பால நடிகன் யார் தெரியுமா ? மாறன் தான்! துருவனைப் பார்த்து, “ஏய் தூதுவா! நான் யார் தெரியுமா ? எங்கப்பா மதியில் நீ உக்காதக் கூதாது!" என்று மாறன் பேசிய மழலை மொழியை
பக்கம்:மறக்க முடியுமா.pdf/21
Appearance