உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறக்க முடியுமா.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டியிருந்தது. 14 இளமைப் நான் இன்னும் மறக்கவில்லை. பருவத்தில் மாறனின் நாக்கு நுனியில் ஒரு சவ்வு வளர்ந்து அது அடிவாயில் ஒட்டிக் கொண்டிருந்ததால் அந்த சவ்வு அறுவை சிகிச்சை செய்து அகற்றப்படும் வரையில் ட ர ற ற என்ற எழுத்துக்களை த என்ற ஒலியுடன் தான் மாறன் உச்சரிக்க மாறன் பேசுவதைப் பார்த்து பள்ளி நண்பர்கள், உறவினர் வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் “தத்தா புத்தா” என்று கூறிக் கேலி செய்வார்கள். சிறுவன் மாறனுக்கு கோபம் வரும், அதனால் அதிகம் பேசாமலே இருப்பார். எதிர்காலத்தில் இந்தியத் தலைவர்கள் எல்லாம் புகழக்கூடிய "அறிவாளி ஆவோம்" என்பதாலோ என்னவோ; தன்னைப் “புத்திசாலி” என்றே கூப்பிட வேண்டும் என்று வற்புறுத்துவார். அப்படிக் கூப்பிட்டால்தான் ஏன் என்று கேட்டு மறுமொழியே சொல்வார். " அவரது அந்த இளமைப் பிராயத்தில் டைரக்டர் கே. சுப்பிரமணியம் அவர்கள் டைரக்ட் செய்து வெளியிடப்பட்ட “பால யோகினி” என்ற திரைப் படம் வெளிவந்து வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருந்தது. "அய்யா, சிறுமி ஏழை என் மேல் மனம் இரங்காதா?” என்ற ஒரு ஊனமுற்ற பிச்சைக்கார சிறுமியின் பாடல் அந்தப் படத்தில் வந்து; அது ஒலிக்காத இடமில்லை. அந்தப் படத்தில் இன்னொரு சிறுமி; மரக் குதிரையில் அமர்ந்து "கண்ணே பாப்பா; மிட்டாய் வாங்கித் தருகின்றேன்" என்று குழந்தைகள் பாட்டு ஒன்றைப் பாடுவார். அந்தச் சிறுமி வேடத்தில் நடித்தவர் பெயர் பேபி சரோஜா!