20 திருமண விஷயத்தில் மட்டும் பிடிவாதமாக மறுப்பு சொல்லியே வந்தார். அவரது 25வது வயதுவரையில் நாள்தோறும் மாறனிடம் நயமாகக் கேட்டும்; தனது காலம் விரைவில் முடிந்துவிடும், அதற்குள் திருமணம் செய்துகொள் என்று பாட்டியார் பயமுறுத்திப் பார்த்தும் மாறனிடம் எதுவும் நடக்கவில்லை. பிள்ளை அம்மாவின் ஆதங்கத்தையும் மாறனின் பிடிவாதத்தையும் கண்டு மனமுருகிய அண்ணா அவர்கள், மாறனை அழைத்துக் கொண்டு அவரே பெண் பார்க்கக் கும்பகோணம் பிடில் மேதை ராஜமாணிக்கம் வீட்டுக்கே புறப்பட்டு விட்டார். அண்ணாவே மாறனுக்குப் பெண் கேட்டு நேரில் வந்தது கண்ட பெரியவர் ராஜமாணிக்கம் பிள்ளை மகிழ்ச்சி வெள்ளத்தில்தான் மிதந்தார். பெண்ணை நேரில் பார்த்த மாறன் பெண் பிடித்திருக்கிறது, ஆனால் இப்போது எனக்குத் திருமணம் வேண்டாம் என்று ஒரேயடியாகச் சொல்லி விட்டார். திருமணம் நிச்சயம் செய்து கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த பாட்டிக்கு ஏமாற்றம்தான் மிச்சம். பேரன் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லையே என்ற அந்தக் கவலையிலேயே என் அம்மா நோயுற்றுப் படுக்கையில் விழுந்தார்கள். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றி அந்த அன்புக் கருவூலத்தின் ஆவி 27.1.1963 அன்று அடங்கிப் போய் விட்டது. "அய்யோ; எங்கள் வீட்டு ஆலமரம் விழுந்து விட்டதே!” என்று அலறித் துடித்த நான், அப்போது அருகில் நின்று அழுது கொண்டிருந்த மாறன் கன்னத்தில் அவர் கன்னம் சிவக்க, என் கை சிவக்க ஓர் அடி கொடுத்து “ஏய்; கடைசி வரையில் இந்த
பக்கம்:மறக்க முடியுமா.pdf/29
Appearance