உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறக்க முடியுமா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அடையாளம் கண்டுபிடித்து என்னை முதன்மை அமர்வு நீதிபதி அசோக்குமார் இல்லத்துக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றார். அங்கிருந்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்குச் அப்பல்லோ சென்றேன். அவசர சிகிச்சை பிரிவில் பல்வேறு பரிசோதனைகள் செய்த பிறகு உள்நோயாளியாக அனுமதித்தனர்.” இவ்வாறு பிரதமருக்குக் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து பின்னர் மருத்துவமனையிலிருந்து திரும்பிய பிறகு செய்தியாளர்களின் சந்திப்பின்போது வெளியிட்ட விபரங்களும், தன்னை விசாரிக்கும் குழுவினரிடம் அளிப்பதற்காக தட்டச்சு செய்து வைத்திருந்த விரிவான தகவல்களும் எவ்வளவு உருக்கமாகவும், உருக்கமாகவும், அவருடைய உயிரையே பறிப்பதற்காக நடைபெற்ற தாக்குதலின் சுருக்கமாகவும் இருக்கிறதென்பதை சரியாகவே முடிகிறது. உணர "நான் கடந்த 35 ஆண்டு காலமாக மக்கள் அவையிலோ, மாநிலங்கள் அவையிலோ ஒரு உறுப்பினராக இருந்து வருகிறேன். இப்போது அமைச்சர் என்ற நிலையில் நான் தாக்கப்பட்டேன், அடிக்கப்பட்டேன், முரட்டுத்தனமாக நடத்தப்பட்டேன். என்னுடைய தலைவரும் முன்னாள் முதல் அமைச்சருமான கலைஞர் கைது செய்யப்பட்டபோது உடனே அவருடைய இல்லத்திற்கு விரைந்தேன். நான் அங்கே அந்த அவர் காவல் துறை அதிகாரிகளால் சூழப்பட்டிருந்தார். அதிகாரிகள், என்னை மரியாதைக் குறைவாகப் பேசத் தொடங்கினார்கள். நீ, வா, போ என்றெல்லாம் ஒருமையில்