உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறக்க முடியுமா.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 குறிப்பிட்டுப் பேசினார்கள். 'நீ யாரடா கேட்பது ? ' என்று என்னிடம் ஒரு அதிகாரி கேட்டார். பிறகு என்னை அங்கிருந்து தள்ளி விட்டார்கள். எங்கள் தலைவரைத் தூக்கிக் கொண்டுபோய் வாகனத்தில் போட்டார்கள். இவற்றையெல்லாம் நீங்கள் ஒளிநாடாவில் பார்க்கலாம். நான் அவர்களைப் பின் தொடர்ந்தேன். அவர்கள் சி.பி., சி.ஐ.டி. அலுவலகத்திற்குச் சென்றார்கள். அங்கேயும் நான் அனுமதிக்கப்பட வில்லை. அங்கே அவர்கள் என்னைத் தாக்கினார்கள். இதோ பாருங்கள்! என்னுடைய மூக்கு கண்ணாடி! து உடைந்திருப்பதை நீங்கள் பாருங்கள்! அவர்களுடைய தாக்குதலினால் எனக்கு மயக்கம் வந்தது. ஆகவே நான் அங்கேயே படுத்து விட்டேன். இந்தப் படத்தைப் பாருங்கள். நான் அரை நிர்வாணமாக இருக்கிறேன். நான் கீழே விழுந்த நேரத்தில் காவல் துறையினர் தங்களின் பூட்ஸ் கால்களால் ல் என் கால்களை மிதித்தார்கள். அந்தக் காயம் இன்னும் எனக்கு கு இருக்கின்றது. இவைகள் எல்லாம் என்னுடைய வேட்டியில் ஏற்பட்ட ரத்தக் கறைகள். இப்போது நீங்கள் பாருங்கள் இந்த வேட்டியை! எவ்வளவு கிழிந்திருக்கிறது ? எவ்வளவு ரத்தம் உறைந்திருக்கிறது என்பதை யெல்லாம் பாருங்கள்! எல்லா புறங்களிலிருந்தும் ரத்தம் வடிந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலாவது காவல் துறையினரிடம் நான் ஒரு நியாயமான மரியாதையை எதிர்பார்த்தேன். அந்த மரியாதை மறுக்கப்பட்டது மட்டுமல்ல; எனக்கும் மத்திய அமைச்சர்