பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன்= –99

பாஞ்சாலக்குறிச்சி அறிக்கையைப் படித்த கும்பெனி கவர்னருக்கு மிகுந்த பயமும், பதட்டமும் ஏற்பட்டது. பாஞ்சாலக்குறிச்சிப் போரில் தோல்வி ஏற்பட்டால், அப்புறம் முதுகளத்துார், சிவகெங்கைப் போர்களை எங்ங்னம் நடத்துவது? அவரால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை? இப்படை தோற்கின் பின் எப்படை வெல்லும்?

மிகுந்த ஆலோசனைக்குப்பிறகு பாஞ்சைப் போரில் ஈடுபட்டுள்ள கும்பெனித் தளபதியை மாற்றுவது தான் ஒரே வழி என கவர்னருக்குப்பட்டது. அடுத்தகணமே கர்னல் அக்கினியூ என்ற கொலைகாரத் தளபதி பாஞ்சாலக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். ஏற்கனவே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மிகப்பெரும் எதிரியாக விளங்கிய தீரர் திப்புசுல்தானைத் தோற்கடிக்க ஏப்ரல் 1799ல் சீரங்கப்பட்டினத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மிகச் சிறந்த தளபதி அவன்.

பாஞ்சைப் படுகளத்திற்கு 21.06.1801ம் தேதியன்று பாஞ்சைப் போரில் எதிரிகள் கையாளும் போர்முறைகளைக் கவனித்தான் தளபதி அக்கினியூ, தற்காப்பு நிலையில் நின்று கொண்டு கும்பெனியாரைத் தண்ணிர் காட்டிவரும் பாஞ்சைப் படைகளது பலத்த தற்காப்பு அரணான அந்தக் கோட்டையை உடைத்துவிட்டால்.......... 7 அக்கினியூவின் திட்டம் அடுததநாள் நிறைவேற்றப்பட்டது. பீரங்கி வண்டிகள் மட்டும் பாஞ்சாலக்குறிச்சிக் கோட்டையைச் சுற்றி நிலைகொள்ளுமாறு செய்தான். கையில் பிடித்து இருந்து சிவப்புக் கொடியை அக்கினியூ அசைத்து தாக்குதலைத் தொடுக்க உத்தரவிட்டான். அவ்வளவுதான், பேய்வாய்ப் பீரங்கிகளது வாயில் இருந்து அக்கினிக் குண்டுகள் பயங்கர சத்தத்துடன் மதிலைப் புடைத்தன.

காலையில் இருந்து மாலைவரை வானமுகடுகள் இடிந்து விழுவது போன்ற பயங்கர ஓசை. தொடர்ந்து நான்கு நாட்கள் கோட்டையை நோக்கிக் குண்டுமழை பொழிவு. பிய்த்து எறியப்பட்ட