பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 OA

- =மறவர் சீமை

கும்பெனியாருக்குச் சொந்தமான ஆறாயிரம் கலம் நெல்லும் தீயில் எரிந்து சாம்பலானது. சித்திரங்குடி சேர்வைக்காரர் முதுகளத்துளில் இருந்த கச்சேரிக்குத் தீவைத்து முழுமையாக அழித்துவிட்டார் என்றும் தெரிவிக்கின்றன. அந்த அறிக்கைகள். மேலும், சித்திரங்குடி சேர்வைக்காரர் ஆப்பனூர் பகுதிக்குச் சென்று கும்பெனியாருக்கு எதிரான கிளர்ச்சியாளர்அணிக்குக் குடிமக்களைத் திரட்டினார் என்றும் 2.7.1801ம் தேதி கமுதிப் பேட்டையில் கும்பெனியார் இருப்பில் வைத்து இருந்த தானியங்கள் முழுவதையும் அழித்ததுடன் திருச்சுழி, உடையார்பட்டி, தமிழ்பாடி ஆகிய கிராமங்களில் கிளர்ச்சிக்காரர்கள் கும்பெனியாரது கூலிப்படைகளை எதிர்த்து வீரத்துடன் போரிட்டனர் என்றும், தகுந்த உதவிகளைக் கும்பெனியாரிடமிருந்து கோரப்பட்டதை பழமானேரி அமில்தாரரது அறிக்கையில் இருந்து தெரிய வருகிறது." அதே அறிக்கை முதுகளத்துார், கமுதி, பெருங்கரை ஆகிய ஊர்களிலும் குடிமக்கள் குமுறி எழுந்து கும்பெனிப் படைகளைத் தாக்கிய செய்தியையும் தெரிவிக்கின்றது.

கமுதிக் கோட்டையில் தற்காப்புக்காகப் போராடிக் கொண்டிருக்கும் கும்பெனி அணிகளுக்குத் தொடர்ச்சியாக ஆயுதங்களும், மாற்று அணிகளும் இராமநாதபுரம் கோட்டையிலிருந்து வந்து கொண்டே இருந்தன. இதனால் கோட்டை முற்றுகையில ஈடுபட்டு இருந்த கிளர்ச்சி அணியினரது தாக்குதலில் தொய்வும், தோல்விக்கான அறிகுறிகளும் தென்பட்டன. கும்பெனியாரின் புதிய அணிகளின் விறுவிறுப்பான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க இயலாத கிளர்ச்சிக்காரர்கள் கமுதிக் கோட்டை முற்றுகையை மெதுவாகக் கைவிட்டு கோட்டைக்கு வடக்கில் அபிராமம் செல்லும் வண்டிப்பாதையில் பின்னடைந்தனர். அவர்களது உள்ளத்தில் நிறைந்து இருந்த வெஞ்சினமும், வெறுப்பும் குறையவில்லை. அவர்கள் அபிராமம் கிராமத்திற்கு வந்தபொழுது அந்த உணர்ச்சிகளின் உந்துதல் பழிவாங்கும் போக்காக மாறியது.

சிலநொடிகளில் அபிராமத்தில் இருந்த கும்பெனியாரது

74. பழமானேரி,அமில்தாரரது அறிக்கை 06.07.18011.12.07.1801