பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன்= - சஞ்சரிக்கும் கோடைகால மேகங்கள் போல பரவித் தொடர்ந்து கொண்டிருந்தன.

தமது நடவடிக்கைகள் பற்றிய சுய விமர்சனம், சிவகெங்கைச் சேர்வைக்காரர்கள் மற்றும், மீனங்குடி முத்துக்கருப்பத் தேவர் ஆகியோரது தலைமையில் ஏற்பட்ட தாமதம், தயக்கம், போர்த்திறன், தோல்விக்கான ஆதாரங்கள் - இப்படி எத்தனையோ சிந்தனைகள்.

சித்திரங்குடி சேர்வைக்காரர் தனது கூட்டாளிள் அனைவரையும் முதுகளத்துார், கமுதி நாடுகளில் உள்ள தங்களது ஊர்களுக்கு அனுப்பிப் பொறுமையுடன் செய்திவரும் வரை காத்திருங்கள்,என்று கூறினார். அவர் மட்டும் தனிமையில் அந்தச் சத்திரத்தில் இருந்து வநதாா.

பத்து நாட்களாகி விட்டன. மெதுவாகச் செய்திகள் கிடைத்தன. பரங்கியரும் அவருக்கு தொங்கு சதைகளான சிவகெங்கைச் சீமை கைக்கூலிகளும் காளையார்கோவிலை அடுத்துள்ள காட்டில் மருது சேர்வைக்காரர்களையும் அவரது தோழர்களையும் தேடிப்பிடிக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர் என்று. அடுத்து இராமநாதபுரம் பகுதியில் இருந்து காளையார்கோவில் போருக்குச் சென்ற மீனங்குடி முத்துக்கருப்பத் தேவரைப் பிடிக்க நயினார்கோவில் பகுதிக்கும், அவரைப் பிடிக்க மானாமதுரைப் பகுதிக்கும் பரங்கி அணிகள் சென்று கொண்டிருக்கின்றன என்று.

ஆம், இவை எதிர்பார்த்ததுதான். எதிரிகளது கை எதிர்பாராத அளவிற்கு ஓங்கி விட்டது. அவர்களது ஆட்ட(ம்) - பாட்ட(ம்) தொடரத்தானே செய்யும்?

இனியும் சூடியூர் சத்திரத்தில் பத்திரமாக இருக்க முடியுமா? வேறு எங்கு செல்லலாம்? என்ன செய்யலாம்?