பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன்= ==

அனுப்புவதற்காக ஆவலுடன் அந்தக் கூட்டத்தினர் காத்திருந்தனர். அந்தக் கூட்டத்திற்கு இடையில் காவிநிறத் துண்டை தலையில் அணிந்தவாறு சித்திரங்குடி சேர்வைக்காரரும் கூட்டத்தினருடன் நின்று கொண்டு இருந்தார். கப்பலுக்குள் முதலில் அழைத்துச் செல்லப் பட்டவர்களில் முதன்மையாக சிவகங்கை மன்னர் வேங்கன் பெரிய உடையாத் தேவரும் அடுத்து இராசசிங்க மங்கலம் ஜெகநாத ஐயனும் காணப்பட்டனர். அடுத்து சின்ன மருது சேர்வைக்காரரின் மகன் குமாரசாமி, வாராப்பூர் பாளையக்காரர் பொம்ைைமய நாயக்கர் அவர்களைத் தொடர்ந்து ஏனைய அறுபத்தி எட்டு பேரும் சிறிய படகுகள் மூலமாக அந்த பாய்மரக்கப்பலுக்கு சென்றதைச் சித்திரங்குடி சேர்வைக்காரர் வேதனையால் விம்மிய நெஞ்சத்துடன் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தார். அவர்களில் நாலைந்து பேர்கள் மட்டும் அவருக்குத் தெரிந்தவர்களாக இருந்தனர். எனினும் அவர்கள் நாட்டிற்காகத் தம்மைப்போல வாழ்க்கையை அர்ப்பணித்த நல்லவர்கள் அல்லவா என்று அவர் நினைக்கும் பொழுது அவரது உணர்ச்சிகளை மீறி அவரது கண்களில் நீர் வழிந்தன.

சிறிது நேரத்தில் பாய்கள் அனைத்தும் இறக்கிவிடப்பட்டு காற்றின் உந்துதலில் பிரம்மாண்டமான அந்த பாய் மரக்கப்பல் மெதுவாக கிழக்கு நோக்கி பயணத்தைத் தொடர்ந்தபோது அந்தி நேரமங்கலான ஒளியில் அதன் தோற்றம் மெதுவாக மறைந்து கொண்டிருந்தது. வேதனை நிறைந்த உள்ளத்துடன் குழுமியிருந்த கூட்டத்தினர் தங்களது தோழர்களையும் உறவினர்களையும் ஒருவாறு கடைசியாகக் கண்டு கொண்ட திருப்தியுடன் கலைந்து செல்ல ஆரம்பித்தனர்.

சித்திரங்குடி சேர்வைக்காரர் நான்கு நாட்களுக்குப் பிறகு தூத்துக்குடியிலிருந்து இராமநாதபுரம் வரும் வழியில் சூரங்குடி சத்திரத்தில் தங்கியிருந்தார். இராமநாதபுரம் சீமையிலிருந்து திருநெல்வேலி செல்லும் வழிப்போக்கர்களை விசாரித்து இராமநாதபுரம் சீமை நிலைமைகளை அறிந்து கொள்வதில் மிகவும்