பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175

மாவீரன் மயிலப்பன்

எவ்வித நியாமும் கிடையாது. மீண்டும கி.பி.1801 பிப்ரவரி மாதம் பாஞ்சாலக்குறிச்சி, சிவகெங்கைக் கிளர்ச்சிக்காரர்களது சட்ட விரோதமான நடவடிக்கைகளில் இவரும் இணைந்து நின்றதுடன் இரண்டாவது முறையாகக் கமுதிக் கச்சேரியைத் தாக்கியதுடன் அமைதியான குடிமக்களைக் கும்பெனியாருக்கு எதிராக தூண்டிவிட்டதுடன் குடிமக்களது பணத்தைப் பறித்ததாகவும், மக்களது குடியிருப்புகளைத் தீக்கிரையாக்கியதாகவும் சொன்னார்.

அத்துடன் கி.பி.1801ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கும் அக்டோபர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் கும்பெனிப் போர் வீரர்களை எதிர்த்துப் போரிட்டதுடன் கும்பெனியாரது சொத்துக்களை அழித்து பெரும் இழப்பீடுகளை ஏற்படுத்தியதாகவும், இதனால் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்கு நியமனம் பெற்ற கர்னல் அக்கினியூ வெளியிட்ட பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்கள் பெயர்ப்பட்டியலில் மயிலப்பன் பெயர் விடுபட்டு இருப்பதையும், அவரது தலைக்கு கும்பெனியார் விலை வைத்து அறிவிப்பு கொடுத்து இருப்பதையும் அவரது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுச சொன்னார்.

இரண்டாவது சாட்சியமாக அபிராமம் கிராமம் முனனால் பேஷ்காரர் ஆறாயிரம் பிள்ளை விசாரிக்கப்பட்டார். அவர் தமது வாக்குமூலத்தில் கைதியை, அபிராமம் கிராமத்தில் 1801ம் வருடம் மே மாதம் முதன்முதலாகப் பார்த்ததாகவும், அவரும் அவரது ஆட்களும் என்னைப் பிடித்தவுடன் மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இந்தக் கைதி, இன்னொரு சேவகரும் ஒரு குதிரையில் சென்று அவர்களை மடக்கிப் பிடித்தனர். பிறகு என்னைக் கொன்று போடும்படி அந்த சேவகருக்கு உத்தரவிட்டார். சில நாட்களுக்கு முன்னர் எனது உறவினரான முத்தையாபிள்ளை இவரைச் சேர்ந்த சில ஆட்களைக் கொன்று போட்டதே இதற்குக் காரணம். அப்பொழுது மேலும் நான்கு பேர் வந்து என்னை கட்டிப் பிடித்துத் துக்கினர். என்னை விட்டு