பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181

மாவீரன் மயிலப்பன்

சாட்சியாக விசாரிக்கப்பட்டார். தனது வாக்குமூலத்தில் எதிரியைத் தனக்குத் தெரியும் என்றும், கி.பி.1799ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதத்தில் காலை ஆறு அல்லது ஏழு மணிக்கு அவரும் கச்சேரி ஷராப்பும் மேனேஜரும் மூன்று அல்லது நான்கு சிப்பாய்களும் கச்சேரியில் இருக்கும்போது திடீரென்று தாக்கப்பட்டோம் என்றும், அவரது கைகளில் வலது கையில் இரு வெட்டுக் காயம் ஏற்பட்டது என்றும், அதனை ஏற்படுத்தியவர் இந்த எதிரிதான் எனச் சொன்னார். சிங்கன் செட்டி கச்சேரியில் இருந்த துப்பாக்கிகளைப் பறித்துச் சென்றார் என்றும், அப்பொழுது இன்னொருவர் வேல்கம்பினால் அவரைக் குத்தியதாகவும் தெரிவித்தார்.

கி.பி.1801ம் ஆண்டு நிகழ்ச்சிகள் பற்றிக் கோர்ட்டார் கேட்டதற்கு, சாட்சி பதில் சொல்லுகையில், அங்கேமே-ஜூன் மாதத்தில் நடந்த நிகழ்ச்சிகள் தெரியும். அவரது ஆட்களும் வந்து முதுகளத்துர் கச்சேரிக்குத் தீ வைத்தனர் என்றும், இருவரது தலைகளை வெட்டிப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன என்றும், சாட்சி அங்கிருந்து ஓடிவிட்டதாகவும் சொன்னார்.

அடுத்து அபிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் விசாரிக்கப்பட்டார். இவர் கி.பி.1799ம் வருடம் ஒருநாள் இரவு முதுகளத்துர் கச்சேரி தாக்கப்பட்டது, அபிராமம் கச்சேரியும் தாக்கப்பட்டதில் ஈட்டிக்காயம் பெற்ற கும்பெனியாரது இரு சிப்பாய்களில் ஒருவர் இறந்து போனார் என்றும், கச்சேரியில் உள்ள துப்பாக்கிகள் எடுத்துச் செல்லப்பட்டன என்றும், இந்தத் தாக்குதலுக்கு மயிலப்பன் தலைமை தாங்கினார் எனச் சொல்லப்பட்டது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து அவர் சாட்சியம் அளிக்கையில் மீண்டும் ஒரு மாதம் கழித்து அபிராமத்திற்கு வந்தார் 500 பேர்களுடன். அவரது ஆட்களுக்குத் தினப்படி கொடுப்பதற்காக ஊர்மக்கள். அவரிடம் 30 கலம் நெல்லும் நான்கு செம்மறி ஆடுகளும் கொடுத்தனர். அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த நெல்லை அவர்கள் சூறையாடாமல் இருப்பதற்காக. அபிராமம் வட்டத்தில்