s * = 183 மாவீரன் மயிலப்பன்= ==
பிறகு சித்திரங்குடி உடையணன் சேர்வைக்காரர் அடுத்த சாட்சியாக விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
ஜூன் 1801ல் காலை நேரத்தில் எதிரியும் அவரைச் சேர்ந்த எழுபது எண்பது பேர்களும் கடலாடி கிராமத்தைச் சூழ்ந்துகொண்டு தன்னை மயிலப்பனிடம் பிடித்துச் சென்றனர் என்றும், அவர் சொன்னதாகத் தெரிவித்தார். என்னிடம் 500 சக்கரம் பணம் கொடுக்கும்படியும், சொன்னதாகத் தெரிவித்தார். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சொன்னதும், அவரை உதைக்குமாறு உத்திரவிட்டார் என்றும், பிறகு நூறு சக்கரம் பணம் கொடுத்த பிறகு விடுதலை செய்யப்பட்டதாகவும், அதற்குப்பிறகு அவரைச் சந்திக்க வில்லை என்றும் தெரிவித்தார். இவரைத் தொடர்ந்து கடலாடி முத்துச்சாமி அம்பலக்காரர் என்பவர் சாட்சியம் அளித்தார்.
முதுகளத்துர் கச்சேரி எரிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு மயிலப்பன் சேர்வைக்காரர் தனக்கு ஒலையொன்று அனுப்பியதாகவும், அதில் 500 சக்கரம் பணமும், 50 கலம் அரிசியும், 50 செம்மறி ஆடுகளும் அனுப்பி வைக்கும்படியும், தவறினால் கடலாடி கிராமம் எரித்து சாம்பலாக்கப்படும் என எழுதி இருந்ததாகச் சொன்னார். இது தன்னால் பூர்த்தி செய்ய முடியாத கோரிக்கை. அடுத்தநாள் மாலையில் இருநூறு ஆட்களுடன் மயிலப்பன் வந்தார். தனது கோரிக்கையை நிறைவேற்றித் தரும்படிகேட்டார். பணம் இல்லாததால் என்னையும் இன்னும் மூன்று பேர்களையும் அடித்து உதைக்குமாறு ஆணையிட்டார். கும்பெனியாரது நெல் எங்கு வைக்கப்பட்டு இருக்கிறது எனறு கேட்டார். அவை இராமநாதபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டன. நாலைந்து நாட்கள் கழித்து நானூறு ஆட்களுடன் வந்து அவர்களுக்கு இரண்டு நாட்கள் படி கொடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. கிராமத்தினர் 10 கோழிகள், சில கைத்தறித் துணி மடிகளையும் கொடுத்தோம்.