பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

= - மறவர் சீமை

மேலும், எதிரி, மிகவும் சிறந்த முறையில் ஆடையும், அணிமணிகளும் அணிந்து காணப்பட்டனர் எனவும் கூறினார்.

இவர்களைத் தவிர சித்திரங்குடி உடையார், பேரையூர் ரெங்கசாமி நாயக்கர், முதுகளத்துர் வேலு முக்கந்தன், கிடாத்திருக்கை முத்துச்சாமி, கடலாடி கருப்பநாதன் ஆகிய ஐந்து அனாமதேயங்களும் இந்த வழக்கில் சாட்சியங்களாக வந்து பொய்ச் சாட்சி சொன்னார்கள்'. முதுகளத்துர் கமுதிக்குமாக அலைய வேண்டியிருந்ததால் அவர்களது தொழில் விவசாயம் போன்றவைகளும் பாதிக்கப்பட்டன. என்ன செய்வது....? ஒப்புக்கொண்டபடி சாட்சியம் சொல்ல வேண்டுமல்லவா? உரலில் கையை நுழைத்துவிட்டால் உலக்கைக்கு தப்ப முடியாதல்லவா?

சாட்சிகள் அப்படியே பொய்சாட்சியம் சொன்னார்கள். அரச மரத்தடியில் அமர்ந்து போதித்தவருக்கு ஞானோதயம் ஏற்பட்டது என்பது வரலாறு. மறவர்சீமை கண்மாய் கரையில் நிலைத்து நிற்கும் அரசு மரப் பொந்துகளில் வளர்ந்த கிளிக்குஞ்சுகள் கூட நன்கு பேசும் என்பது உண்மை அல்லவா? இத்தகைய அரசு மரக் கிளிகள் போல் சாட்சிகள், உதவி கலெக்டர் மில்லர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே சரியான வாக்குமூலங்களாக சொன்னார்கள். இதில் உதவி கலெக்டர் மில்லருக்கு மிகுந்த மகிழ்ச்சி நடுவர்கள் மயிலப்பனை குறுக்கு விசாரணை செய்யுமாறு பணித்தார்கள். அந்த கழிசடைகளை சிறிது நேரம் கூட ஏறிட்டுப் பார்ப்பதற்கு மனமில்லாத மயிலப்பன் சேர்வைக்காரர் நடுவரது சொல்லுக்குப் பதிலளிக்காமல் மெளனமாக இருந்தார்......

பாளையங்கோட்டையின் வாசல் முகப்பிற்கு நேர் எதிரில் உள்ள கோட்டைத் தளபதியின் அலுவலகக் கட்டிடத்தில் கும்பெனி வீரர்கள் நீண்ட கத்திகள் இணைத்த துப்பாக்கிகளைப் பிடித்தபடி பாதுகாப்புப் பணியில் வரிசையாக நின்று கொண்டிருந்தனர். கோட்டையின் பின் பகுதியில் உள்ள சிறைக்கூடத்தில் இருந்து

104. இந்த சாட்சிகள் வாக்குமூலத்துடன் அரசு தரப்பு விசாரணை முடிவுற்று மறுநாள் (1206-1802) எதிரியின் தரப்புவிசாரணை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. மறுநாள் காலையில் வழக்குமன்றம் கூடிய பொழுது மயிலப்பன் சேர்வைக்காரர் மீதான குற்றச்சாடுகள் அவருக்கு வாசித்துக் காட்டப்பட்டு அவரது தரப்பில் சொல்ல வேண்டிய திருப்பின் சொல்லிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.