பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன்

6. எதிர்த்தாக்குதல்களில்

தளபதி பானர்மேன் தலைமையில் பெரும்படை ஒன்று புறப்பட்டு வந்துவிட்டது என்ற தகவல் கிடைத்த பிறகுதான் கலெக்டர் லூவிங்டனுக்கு நிம்மதி ஏற்பட்டது. மதுரைக் கோட்டையில் இருந்து தளபதி டிக்பர்ன் தலைமையில் இன்னொரு சிறிய அணியும்வந்து 16.05.1799ம் தேதியன்று பள்ளிமடத்தில் இணைந்து கொண்டது. இங்கே இந்த அணிகளைத் தனித்தனி அணிகளாகப் பிரித்து கிழக்கே கமுதி, ஆப்பனுர் குமாரக்குறிச்சி ஆகிய ஊர்களுக்குத் தளபதி பானர்மேன் அனுப்பி வைத்தார். பரங்கிப்படை வருகையை உளவாளிகள் மூலம் தகவல் அறிந்த சித்திரங்குடி சேர்வைக்காரர் முதுகளத்தூர் பகுதி நாடுகள் அனைத்திற்கும் ஒலைகள் அனுப்பி இறுதி போராட்டத்திற்கு

ஆயத்தமாக இருக்கும்படி அறிவுறுத்திவிட்டு, கமுதிக்கோட்டையை நோக்கி விரைந்தார்.

முதுகளத்துர் நோக்கி வந்த பரங்கிப் பட்டாளத்தைக் கிளர்ச்சிக்காரர்கள் கிடாத்திருக்கை அருகே வழி மறித்தனர். நானுறு பேர்களைக் கொண்ட அந்த அணியில் ஒரு சிலரிடம் மட்டும் துப்பாக்கிகளும் மேட்ச் லாக்குகளும் இருந்தன. ஏனையவர்களிடம் மறவர்களுக்குரிய வாள், வேல், வளரி, ஈட்டி ஆகியவைகள் இருந்தன. கோடைக்காலச் சூரியனின் ஏறு வெய்யில், கொடுமையைச்