பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*—

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS _ =மறவர் சீமை

சிறிதும் கருதாமல் மிகுந்த ஆவேசத்துடன் பரங்கிகளைத் தாக்கினர்." ஊருக்கு மேற்கே நடந்த இந்தப் போரில் பரங்கியர்களது துப்பாக்கிகள் படபடவென தொடர்ந்து வெடித்தன. ஏதோ கோவில் திருவிழாவில் நடக்கும் வானவேடிக்கையாக நினைத்து இந்தத் துப்பாக்கிச் சூடுகளைப் புறக்கணித்து எதிரிகளை வெட்டிச் சாய்த்தனர். சேதுபதி மன்னரது முன்னாள் பிரதானி முத்துக்கருப்பப்பிள்ளை, அவருக்கே இயல்பான முறையில் கறுப்புக் குடையை கையில் பிடித்தவாறு கிளர்ச்சிக்கார்களுக்கு ஆணைகள் பிறப்பித்து போராளிகளுக்கு உற்சாகம் ஊட்டியும் வந்தார். தமது கறுப்புக் குதிரையில் அமர்ந்து இங்கும் அங்குமாகச் சென்று போராளிகளுக்கு ஆர்வம் ஊட்டி வந்தார். பரங்கி அணியின் துப்பாக்கிச் சூட்டிற்கு ஈடு கொடுக்க முடியாத கிளர்ச்சிக்காரர் அணி, பக்கத்தில் உள்ள காட்டிற்குள் பின் வாங்கியது. எவ்வளவுதான் உக்கிரமாகப் போரிடுவதற்கு உள்ளத்தில் உறுதியும் உடம்பில் தெம்பும் இருந்தாலும் எதிராளியின் அகர தாக்குதலைக் சகித்துக் கொள்ள உடல் வலு உதவ வேண்டுமல்லவா?

இன்னும் ஆப்பனூர், குமாரக்குறிச்சி ஆகிய ஊர்களில் பாங்கிப் படையினருடன் சிறு சிறு மோதல்கள், அவைகளைப் பரங்கித் தளபதி கிரிப்ஸின் தலைமையிலான அணி எளிதாக முறியடித்து கிளர்ச்சிக்காரர்களைத் துரத்தியடித்தது. ஆனால், அதே நேரத்தில் உண்மையான் போர் கமுதிக் கோட்டையைச் சுற்றித்தான் நடந்தது. சித்திரங்குடி சேர்வைக்காரரும், அவரது துணைவர்களான சிங்கள் செட்டியும், பொட்ருேம் பரங்கிப் படைகளுடன் அவர்களது விர மரணப்போரை இந்தக் கோட்டையில்தான் தொடங்கினர். பிறந்த மண்ணைக் காக்க எழுந்த பெரும் போர் சங்ககால மறவனது வீரத்தையும் வெறியாட்டத்தையும் நினைவுபடுத்தும் பேராண்மைப் போர்

கி.பி.1710 முதல் 1726 வரை இராமநாதபுரம் மன்னனாக இருந்த மன்னர் முத்து விஜய ரகுநாத சேதுபதிதான், இந்தக் கோட்டையை அமைத்தார். வரலாற்றில் பொன்றாத புகழுடன் விளங்கும் இந்தப்

31. Ramnad Collectorate vol 95A / 09.05.79 pp. 998-10C0.