பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 =مسیه به قیمریه

இருப்பதாகவும், கோட்டை கொத்தளங்களில் 1500 பேர் காவல் பணியில் இருப்பதாகவும், அவர்கள் இரவு நேரத்தில் கும்பெனி சைனியத்தைத் தாக்க ஆயத்தம் செய்து வருகிறார்கள் என்பது உளவாளிகள் அளித்த தகவல். அத்துடன் ஆறே ஆறு நாட்களில், கோட்டை கொத்தளங்களுடன் 1500 பாளையக்காரர்களது வீரர்களது பாதுகாப்பில் பார்த்தவர் வெறும் பெருமூச்சுவிடும் வகையில் அந்தக் கோட்டையைப் புதிதாக நிர்மாணித்து இருந்தனர்."

ஆனால், கும்பெனியார் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி கோட்டையைப் பிடிக்க முயற்சிப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த ரகசியம். இந்த நிலையில் வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு மிகுந்த தைரியமூட்டி அவரை வெள்ளையருக்குக் கப்பம் கட்டாமல் செய்த மருது சேர்வைக்காரர்களிடம் ஆயுத உதவியை சிவத்தையாவும், ஊமைக் குமாரசாமியும் எதிர்பார்ப்பது இயல்புதான். அவரது அவசர ஒலைகளைப் பெற்ற தூதுவர்கள் சிவகெங்கைக்கு விரைந்தனர்.

பாஞ்சாலக்குறிச்சிக்குச் சிவகெங்கையில் இருந்து ஆயுத உதவி கிடைக்கும் என்ற உறுதியுடன் பாஞ்சைத் தூதுவர்கள் ஊர்திரும்பினர்.

ஆதலால், இந்த பொறுப்புள்ள பணியை மேற்கொள்ள

ஆயத்தமாக இருக்குமாறு சித்திரங்குடி சேர்வைக்காரருக்கு சிவகெங்கையில் இருந்து செய்தி அனுப்பப்பட்டது.

சிவகெங்கையில் இருந்து பாஞ்சாலக்குறிச்சிக்கு ராணுவ உதவி செல்லத் தொடங்கியது. முதல் அணியில் பெரிய மருது சேர்வைக்காரரது மருமகன் ஆளஞ்சாத்தேவன், சிவத்தத் தம்பியின் அடைப்பம் பிச்சணன் சேர்வைக்காரருடன் சித்திரங்குடி சேர்வைக்காரரும் சேர்ந்து கொண்டார். இந்த அணியில் 100 வீரர்களும், பதினைந்து துப்பாக்கிகளும், எண்பத்தி ஐந்து குத்து ஈட்டிக்காரர்களும் பாதுகாப்புடன், இருபத்து ஒரு பொதி

41. welsh - col - miitary - Reminiscences - vol 11-1868.