பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ՅC) - =மறவர் சீமை

அடுத்து மயிலப்பன் சேர்வைக்காரரும் அவரது குழுவினரும் கொடுமலூரில் கும்பெனியார் நெல்லைக்குவித்து வைத்துள்ள சேகரம் பட்டறைகளைத் தாக்கி அழிக்கும் இலக்குடன் புறப்பட்டனர்.

சித்திரங்குடி சேர்வைக்காரரது செயல்களினால் கும்பெனி நிர்வாகம் கலகலத்துத் திணறியது. தெற்கே ஊமைத்துரையும், சிவத்தையாவும், பாளையங்கோட்டைச் சிறையை உடைத்துப் பாஞ்சாலங்குறிச்சிக்குத் தப்பியோடி அந்தக் கோட்டையைப் போருக்கு ஆயத்தப்படுத்தியது. வடக்கே சிவகெங்கைச் சீமையில் இருந்து பாஞ்சைக்கு வெடிமருந்தும், ஆயுதங்களையும் இரகசியமாக இரவோடு இரவாக சிவகெங்கைப் பிரதானிகள் அனுப்பிக் கொண்டு இருந்தனர்.

இடையில் இராமநாதபுரம் சீமையில் சித்திரங்குடி சேர்வைக்காரரது கிளர்ச்சி கும்பெனியாரது சொத்துக்களுக்குச் சேதம். அடுத்தடுத்து மிட்டாதார்கள் அமில்தார் மயிலப்பனது கிளர்ச்சி பற்றிய அறிக்கைகள். இவைகளைச் சமாளிப்பது இராமநாதபுரம் சீமை கலெக்டருக்கு பெரும் தலைவலியாக இருந்தது.

மயிலப்பன்.......................... மயிலப்பன்

தமது அலவலகத்தில் அமர்ந்து அவரது ஊழியர்களான அமில்தார்களும், மிட்டாதார்களும் அனுப்பியிருந்த அறிக்கை ஒலைகளைப் படித்து முடிக்க கலெக்டர் லூசிங்டனது சிந்தனையில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது சித்திரங்குடி சேர்வைக்காரரது பெயர்................... மயிலப்பன்.

அரசியல் தெளிவும், நிர்வாகத் திறனும் மிக்க கும்பெனியாரது செயலராகப் பல ஆண்டுகள் சென்னைக் கோட்டையில் பணிபுரிந்த இந்த கலெக்டரது பணிக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்த பெயர்