பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_69

மாவீரன் மயிலப்பன்- - - = ==

பாஞ்சாலங்குறிச்சிப் பிரச்சினை சூடு பிடித்தது!

இதற்கிடையில் காடல்குடி, நாகலாபுரம் பாளையங்களில் பொருந்திய கும்பெனியாரது Ц 6 т). Ц . В біт) 6mт சித்திரங்குடி சேர்வைக்காரரும், அவரது குழுவினரும் துவம்சம் செய்த செய்தி அந்த வட்டாரம் முழுவதும் பரவி கும்பெனி அலுவலர்களது உள்ளத்தில் மிகுந்த பீதியை உண்டாக்கியது. பாப்பான்குளம் மிட்டாதார் போன்றவர்கள் தங்கள் பாதுகாப்பிற்கு கூடுதலாக ஆயுதங்கள் கோரி அறிக்கைகள் அனுப்பி இருப்பது அவர்கள் அடைந்த கலக்கத்தை உறுதிப்படுத்தியது." இராமநாபுரம் சீமை நிர்வாகமும், சிததிரங்குடி சேர்வைக்காரரது சித்து விளையாட்டுக்களைக் கேட்டு நடுக்கம் கொண்டது. ஏற்கனவே, அவரது தலைக்கு வைத்து இருந்த விலை 500 சக்கரத்தை" 1000 சக்கரம் என உயர்த்தி சீ மையெங்கும் அறிவிப்புக் கொடுத்தது. பண ஆசை பிடித்த பதர்கள் சித்திரங்குடி சேர்வைக்காரரைத் தங்களிடம் பிடித்து ஒப்புவித்துவிடுவார்கள் என்ற வீண் ஆசை கும்பெனியாருக்கு!

தங்களது முயற்சியில் பலன் இல்லையென்று அறிந்த கும்பெனி நிர்வாகம், சித்திரங்குடிக்கு விரைந்து சென்று சித்திரங்குடி சேர்வைக்காரரது மனைவி மற்றும் அவரது சகோதரியைக் கைது செய்தது. அதேபோல், முந்தைய கிளர்ச்சியில் சித்திரங்குடி சேர்வைக்காரரது அணியில் நின்று கும்பெனிப் படைகளை எதிர்த்து முத்தையா பிள்ளையும், பாண்டியன் பிள்யுைம் முதுகளத்தாரில கைது செய்து இராமநாதபுரம் கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதேசமயம் பாஞ்சாலங்குறிச்சியில் கைது செய்யப்பட்ட கட்டபொம்மு நாயக்கரது குடும்பத்தினர் சிலரும் பாதுகாப்புக் கைதிகளாக இராமநாதபுரத்திற்கு கொண்டு வரப்பட்டன.

மேலும், கமுதிக் கோட்டைப் பாதுகாப்பைப் பலப்படுத்த களபதி பிரிட்டன் என்பவனது தலைமையில் கும்பெனியாரது முதலாவது

--- ------------- is

45. Madurai District Record vol. No 1221/2802.1801/p.p52-54 46. சக்கரம் என்பது.அப்பொழுது அந்தப் பகுதியில் செலவாணியில் உள்ள பனம்.