பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 அருவி. விண்மீன். வெண்ணிலா, செங்கதிர், புள், பூ முதலிய மண்ணகப் பொருள்களை, மக்கள் நாளும் காணலும் பொருள்களைத் தம் கவிதையால் படம்பிடித்துக் காட்டி (லும் அவற்றைப் பற்பல கவிதை ஒவியங்களாக பற்றிக் காட்டினர். கண்டனர் மக்கள் , தம்மைப் பற்றிப் பாடும் கவிஞனை உற்று நோக்கினர்கள். தமக்காகவே தம் கவிதையையும், சீரிய புலமையையும் பயன்படுத்துகின்ற ஒரு பெரும் பாவலனே மக்கள் கண்ணுரக் கண்டு கண்டு களித்தனர். பயன் மக்கள் அவரைப் போற்றினர் வாயார வாழ்த்தினர் அவர் கவிதைகளைத் தேடித் தேடிப் பாடிப் பாடி மகிழ்ந்தனர். முடிவில் தம் உள்ளங்களிலே பாரதிதாசனுக்கு ஒர் இடம்-சீரிய இடம், அழியா இடம் மக்கள் தந்து பொன் போற் பொதிந்து கொண்டனர். பாரதிதானுக்குத் தமிழிலக்கியத்திலே ஓர் சீரிய, சிறந்த இடத்தை மக்கள் ஏற்படுத்தித் தந்துவிட்டனர். அதுமட்டுமா ? இன்று பாரதிதாசனின் கீழ் ஒரு பெரும் பரம்பரையே தோன்றி. வளர்ந்து வருகிறது. அந்தப் பரம்பரை ஆயிரக் கணக் கான கவிதைகளே இன்று தமிழ் அன்னையின் மீது சொரிந்து வருகின்றனர். தமிழன்னை கவிதை மாரியிலே நனகின்ருள் அவள் உடல் தூய பொன்னக ஒளிரு. கின்றது : முகம் முழுநிலவெனப் பொலிகின்றது. பாரதிதாசனின் வாழ்க்கை பாரதிதாசன் அவர்கள் புதுவையிலே சென்ற நூற்ருண்டின் இறுதியிலே தோன்றினர். அவரைப் பெற்ற பெருமை கனகசபை என்ற பெரியாரைச் சேரும். பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புர்த்தினம் என்பதாகும். பாரதிதாசனின் பிள்ளைப் பருவத்தில் புதுவை பிரெஞ்சு