பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 காதலா? கடமையா? என்பது கவிதை நடையில்அமைந்த ஒர் அமுகிய சுவை கெழுமிய நாடகம். அழகின் சிரிப்பு என்பது, மலே, و ارای رت கடல், விண், வெண்ணிலா, பெங்கதிர், சோலே முதலிய இயற்கைச் செல்வங்களிலே தங்கிப் ப்ொங்கிப் பொலியும் எழிலின் ஏற்றத்தையும் தோற்றத்தையும் கவிதைத் தேனிலே குழைத்து ஊட்டும் ஒர் அழகிய நூல். இசையமுது என்பது பாரதிதாசனின் இசைத்தமிழ்ப் புலமைக்கோர் எடுத்துக்காட்டாகும். அதிலுள்ள பாடல் சில இசைத்தட்டுக்கள் வடிவில் வெளி வந்துள்ளன. தமிழியக்கம் என்பது தமிழைப் பல்துறைகளிலும் வளர்க்க வேண்டிய முறைகளையும். அதற்குக் கேடுறுதல் செய்வோரை ஒறுக்கும் வழிகளை யும், தமிழ்த்தொண்டர்க்குரிய ஊக்க உரைகளையும் கொண்ட கவிதைகள் பல கொண்ட நூலாகும். அகநானூற்றிலே சேரன் ஆட்டன் அத்தி, சோழன் கரிகாலன் மகளாம் ஆதிமந்தி ஆகியவர்கள் பற்றிய குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன. அவற்றினைக் கருவாகக் கொண்டு உருவாக்கப் பட்ட ஒர் உரைநடை நாடக நூலே ' சேரதாண்டவம்' என்பதாம். இது சிறந்த உரைநடையானியன்றது. படித்த பெண்கள். . கற்கண்டு என்ற இரண்டு உரை நட்ை நாடகங்களும் சமுதாயச் சீர்திருத்தத்தை அடிப் படையாகக் கொண்டவை: நகைச்சுவை மலிந்தவை: பகுத்தறிவு மணம் பரப்புவன் குடும்ப விளக்கு என்பது ஒரு சீரிய நூ ல். தமிழ்க் குடும்பம் ஒவ்வொன்றிலும் இருக்கவேண்டிய நூல். கல்ல குடும்பம் ஒரு பல்கலைக்க கேம் என் ற: ஒரு