பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை இந்ா,ாலில் தமிழகத்தின் தலை சிறந்த கவிஞர் கான பாரதியார், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறும் அவர்களது கவிதை நயங்களும் எடுத்துரைக் கப் பட்டுள்ளன. தற்காலத்தில் இந்த நான்கு கவிஞர்களைப் பற்றி அறியாத தமிழ் மக்கள் மிகமிகச் சிலரே என்னலாம். இருப்பினும் ஆசிரியர் ஒரளவு இக்கவிஞர்களின் கவிதை நயங்களை மிகத் தெளிவாகவும் சுருக்கமாகவும் எடுத்துக் கூறிப் பலரும் அறிய உதவுமா று எங்கள் நூலகத்தின் வாயிலாகப் புத்தகமாக்கி வெளியிடச் செய்ததற்கு எங்கள் மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு இந்நூலுக்குச் சிறப்புரை வழங்கிய பேராசிரியர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிருேம். மேலும் இந்நூலினை தமிழ்ப் பெருமக்கள் அனை வரும் படித்துப் பயனடைய வேண்டுவதோடு, எங்களுக் கும் பேராதரவு தந்து ஊக்குவிப்பார்கள் என நம்பு கிருேம். ೧ சாந்தி நூலகத்தார்