பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4th, | اند . • ‘7 to J 1. கவிக் குயில் தோற்றுவாய் தமிழிலக்கிய வரலாற்றிலே இருபதாம் நூற்ருண்டு ஒரு திருப்புமுனையாகும். இந்நூற்ருண்டில்தான் பல கவிஞர்கள் தோன்றித் தமிழிலே பல எளிய, இனிய, பழைய இலக்கணத்திற்கு அடிமையாகாத, எல்லோ ருக்கும் புரியவல்ல கவிதைகளைப் பாடினர். பாமர மக்களும் பைந்தமிழைப் புரிந்து பாராட்டுவாராயினர். இத்தகைய மறுமலர்ச்சியை உண்டாக்கிய பெருமை பாட்டுக்கொரு புலவனுகிய பாரதிக்கே உரியதாகும். சுருங்கக் கூறின் இருபதாம் நூற்ருண்டு மாண்புமிகு கவிஞர் பாரதியே. வரண்டு கிடந்த தமிழகத்தை வசந்தச் சோலையாக்கி, அதிலிருந்துகொண்டு கன்னித் தமிழ்பாடிய கவிக்குயில் பாரதியார் என்று கூறிஞல் அது மிகை யாகாது. பைந்தமிழ்ப் பாக்கள் பாடி பாமர மக்களைத் தட்டி எழுப்பி, உணர்வும் உரமும் ஊட்டி, உரிமை வேட்கையுடன் மொழிப்பற்றையும் ஏற்றி, ஆங்கில அரசிற்கு அடிமைகளாக விளங்கிய தமிழ் மக்களைத் தலைநிமிரச் செய்து, வாடிய அவர்களை வாழவைத்த வள்ளலாகிய பாரதியார். இன்று தமிழகத்திலே பொங்கி வழிகின்ற தமிழார்வத்திற்கு, பூத்துக் கொழிக்கின்ற இக்கட்டுரை மதுரை, மருத்துவக் கல்லூரியில் 1958-இன் நடந்த பாரதி விழாவில் ஆற்றிய சொற்பொழிவ ■