பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



ஒரு மனிதன் தனக்குள்ளே தேங்கிக் கிடக்கும் சக்தி களையும் சாமர்த்தியங்களையும், திறமைகளையும் பெருமை களையும் தெரிந்து கொள்ள முடிவதில்லை. முயல்வது மில்லை, விரும்புவதுமில்லை.


எது ராஜ சுகம்?


சோற்று சுகம், தேக சுகம் இவைகள்தான் ராஜ சுகம்” என்று அறியாமைச் சேற்றிலே, அறிவில்லாப் பன்றிகளாகப் புரண்டு மெய் மறந்து கிடக்கின்றார்கள் பலர்! பாவம்! சக்தியை சகதியாக்கிக் கொண்டு சாய்ந்து போகின்றார்கள்.


‘தன்னை அறிந்து கொள்கிறவன் தான் தலைவனாகி றான்’ என்பது பழமொழி.


தன் சக்தியை, தனது திறமையைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற ஆக்க பூர்வமான காரியங்களை மேற் கொள் கிற மனிதனே, மற்றவர்கள் மதித்துப் போற்றும் மகாமனித னாக மாறுகிறான். மாபெரும் வரலாற்றையே படைத்துக் கொள்கிறான்.


அப்படிப் பட்ட ஒர் அரிய வாய்ப்பினை மற்ற துறைகள் வழங்கினாலும், அவற்றிலே தலையாய இடம் வகிப்பது விளையாட்டுத்துறைதான்.


உடலும் உறுதியும்


உழைக்க உழைக்கத் தான் உடல் உறுதி பெறுகிறது. அழகாக மாறுகிறது. பொலிவும் பூரணத்துவமும் பெறு கிறது.


குறிப்பிட்ட நோக்கத்துடன் குன்றாத இலட்சியத்துடன், உடலால் உணர்வால் உழைக்கும் பொழுது, அவனது தேக சக்தி அளவிலாசக்தியாகப் பரிணமித்து, அற்புதமான சக்தி யாகவும் பெருக்கெடுத்து, பெரும் பிரளயமாகவே ஒடுகிறது.