பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி 1.21


உதாரணமாக, ஆசனம் செய்யும் பொழுது, ஆழ்ந்த மூச்சினை இழுக்கிறோம். அப்பொழுது அடிவயிறு உட்புற ம்ாக அழுத்தப்படுகிறது. அதற்கு மேலே உள்ள உதர ஆதானமானது மேலோங்கி எழுகிறது. அப்பொழுது இத யத் திறனை அது தாங்கிக் கொள்வது போன்ற ஒர் இணைப்பு ஏற்படுகிறது. இதனால் இதயத்திற்கு சற்று அதிக இயக்கம் போல் ஏற்பட்டு, சக்தி மிகுந்ததாக மாறி விடும் சந்தர்ப்பம் நேரிடுகிறது.


ஆகவே, ஆசனங்கள் இதயத்தின் சக்தியை அதிகமாக்கி ஒய்வு பெறுகிற சூழ் நிலையையும் உண்டாக்கி, உடலின் பூரண பொலிவுக்கு உத்வேகம் கொடுக்கின்றன.


4. இதயத்திலிருந்து இரத்தத்தை எல்லா உறுப்புக் களுக்கும் எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களை தமணி: என்றும், உறுப்புக்களிலிருந்து தூய்மையிழந்த இரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் குழாய்களை சிரை என்றும் கூறுவார்கள்.


உடம்பின் கீழ்ப்பகுதியிலுள்ள சிரைகள், மிகவும் சிரமப்பட்டே இரத்தத்தினை இதயம் நோக்கி எடுத்துச் செல்வதால், மேலேறும் பொழுது சிரமப்படுகின்றன.


அதன் காரணமான சிரைக் குழாய்கள் பலவீனப்பட்டு போகின்றன. கால்களில் பார்த்தால், நரம்புகள் புடைத் துக் கொண்டு ஒரு சிலருக்கு இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.


அப்படிப்பட்ட அழகற்ற, வலிவற்ற நிலை சிரை களுக்கு ஏற்படாமல், ஆசனங்கள் உதவுகின்றன. எப்படி யென்றால், நின்றும், படுத்தும், குனிந்தும், கால்களை மேலே உயர்த்தியும் ஆசனம் செய்யும் பொழுது, சிரை


tD – 8