பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 டாக்டர். எஸ். நவராஜ் செல்லைய ,


(Hammer), ஜிம்னாஸ்டிக் வளையங்கள் மற்றும் முக்கிய விளையாட்டுக்களின் இலக்குக் கம்பங்கள் எல்லாம் இரும் பால் செய்யப்பட்டவையாகும்.


இதற்கும் மேலாக, இரும்பு மரம், துணி இவற்றின் கூட்டுக் கலவையில் உருவாகின்ற பொருட்களும் இருக் 65% spor. Discus, Javvelin, Hurdles, Pole vault, High Jump Stands, Parallel and Horizontal Burs Gustsrp பொருள்கள் இதற்குச் சில சான்றுகளாகும்.


எண்பது கோடிக்கு மேல் மக்கள் இருக்கின்ற நம் நாட்டில், ஒலிம்பிக் பந்தயங்களில் தங்கப் பதக்கம் வாங்கு கின்ற அளவுக்கு ஒருவர் கூட இல்லையே என்ற ஏக்கம், எல்லோரிடையேயும் இருக்கத்தான் இருக்கிறது.


விளையாட்டு உணர்வும் உற்சாகமும் என்பது, எல் லோரிடையேயும் இருக்கிறது. ஆசையும் ஆவேசமும் இருக் கிற அளவுக்கு, அவற்றை நிறைவேற்றிக் கொள்ள, ஏற்ற சூழ்நிலைகள் அமையவில்லை.


பணமும் பயிற்சியும்


குடும்பச் சூழ்நிலை, பணம்பற்றாக் குறை, விளையாட இடமின்மை, மைதானம் இருந்தாலும் விளையாட்டுப் பொருட்கள் இல்லாத குறை, பொருட்களை வாங்க முடி யாத வசதி பின்மை, வசதியுள்ளவர்களும் விளையாட்டுப் பொருட்களை வாங்கப்பயப்படும் அளவுக்கு விலைவாசி ஏற்றம், அதற்கும் மேலாக பயிற்சியாளர்களின் குறைந்த எண்ணிக்கை என பல காரணங்களைக் கூறலாம்.


இங்கு நாம் விளையாட்டுப் பொருட்களின் தரம் பற்றிப் பார்க்கின்ற சூழ் நிலையில் இருப்பதால், மற்2