பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



இப்படிப்பட்டக் குணமுடையவர்கள் விளையாட்டுக் அளில் ஈடுபட்டால் எப்படி இருக்கும் ? உதாரணமாக, 26 மைல் தூரம் ஒடுகின்ற ஒட்டக்காரர்கள், தங்களுடைய தேகத்தைக் கடுமையாக உழைக்கச் செய்து, பொறுமை யுடன், பெரிய காரியமாற்றி, பேரும் புகழும் பெறுபவர்கள்.


அவர்களுடைய நோக்கம் விளையாடும் போதே மன உறுதியை, தொடர்ந்து செயல்படும் உள்ள உறுதியை, துன்பத்தில் துவண்டு போகாத தேக வலிமையை, எப் பொழுதும் உழைத்து மகிழும் இனம் புரியாத உணர்வு. களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான். துன்பத்திலும் இன்பம் காணும் தூயவர்கள் ஆவார்கள்.


4. அழகும் நளினமும் பெறுவதற்காக!


எல்லோரும் தான் நடக்கிறார்கள், ஒடுகிறார்கள், இயங்குகிறார்கள். அந்த நடையில் ஒரு நளினம், ஒட்டத்தில் ஒர் அழகு. இயக்கங்களில் ஒருவித எழில். இப்படியெல்லாம் இயற்கை அழகை ரசிப்பது போல, தாங்கள் பங்கு பெறும் விளையாட்டுக்களிலும் தங்கள் நளினங்களை வளர்ப்பதும் ரசிப்பதும் போன்ற செயல்களில் பலர் ஈடுபடுகின்றார்கள்.


நடனம், ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற சீருடற் பயிற்சிகள், பேலட் நடனம், தரை மீது செய்யும் உடற்பயிற்சிகள், பனிச்சறுக்கு விளையாட்டுக்கள் போன்றவைகளில் ஈடு படுவோர் இத்தகைய பண்பினராவார்கள்.


5. பிரச்சினைகளில் விடுபட, வெற்றி பெற!


உலகில் வாழ்கிற ஒவ்வொரு மனிதனும், பிரச்சினை கள் பல புகுந்து விளையாடும் பிரதேசமாகவே விளங்குகி றான். “இந்தப் பிரதேசம் சில நேரங்களில் பூகம்பப் பூமி யாக புகைந்தெழும் போது, அவன் பிரேதமாக மாறிப் போவதும் உண்டு.