பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து டெக்கும் மனித சக்தி 87 தனது குருநாதரைப் போலவே, கார்ல் லூயிசும் தன் 18 வயதில் 100 கெஜ தூரத்தை 9.3 நொடிகளில் ஒடி, தளத் தாண்டலில் 28 அடி அங்குலமும் தாண்டி புகழ் பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 28 அடி 9 அங்குலம் தாண்டி தன் ஆற்றலை வெளிப்படுத்தினார்.


ஹெல் சிங்கியில் நடைபெற்ற உலக ஒடுகளப் போட்டி களில் 100 மீட்டர், நீளம் தாண்டல், 4 x 100 மீ. தொடரோட்டம் இவற்றில் பங்கு பெற்று தங்கப்பதக்கங் களை வென்று, உலககையே வியப்பில் ஆழ்த்தினார்.


இதுவரை விரைவோட்டங்களிலும், நீளம் தாண் டலிலும் வெற்றிபெற்றதாக அமெரிக்க நாட்டு ஒட்டப் போட்டிகளின் சரித்திரத்தில் இடம் பெறாத ஒரு ஒப்பற்ற தன்மையை கார்ஸ் லூயிஸ் வென்று சரித்திரம் படைத்தார்.


1984ம் ஆண்டு லாஸ் ஏஞ்செல்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயங்களில் 4 தங்கப் பதக்கங்களை வென்று சிஇசி ஒவன்சுக்கு இணையாகப் புகழ் பெற்றார்.


1988 ஆண்டு சியோல் ஒலிம்பிக் பந்தயத்தில், 180 மீட்டர் ஒட்டம், நீளத்தாண்டல் இரண்டிலும் மீண்டும் தங்கம் வென்று, புதிய சாதனை படைத்தார்.


இட்லரின் இரும்பு மனம்


1936ம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயத்தில் நான்கு பதக்கங்களை வென்ற ஜெசி ஒவன்ளைச் அலட்சியப் படுத்தினான் இட்லர். நீக்ரோ இனத்தவன் என்று நிர்த்தாட்சன்யமாகப் பே9 ஒதுக்கினான்.