பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


நாக்கோ வெளுத்து விட்டது போன்ற வெண்மையான அமைப்பைப் பெறுவதுடன், வாயில் கெட்ட நாற்றமும் வீச ஆரம்பித்து விடுகிறது. சிறுநீரும் கொஞ்சம் ஆரஞ்சு கலந்த வண்ணமாக மாறி, சிறிது நாற்றம் கொள்ளவும் தொடங்கி விடுகிறது.


அதாவது, சாதாரணமாக வெளியேற்றும் கழிவுப் பொருட்களின் அளவு, இப்போது பத்துமடங்காகப் பெருகி கொள்கிறது.


வயிற்றுக்கு ஏதும் உள்ளே செல்ல வில்லை என்பதால், ஜீரண உறுப்புக்கள் ஒய்வாகி விடுகின்றன என்றாலும். அவைகள் செயல்களில் நிறுத்தம் இல்லாமல், இயக்கத்திலே தான் இருந்து கொண்டிருக்கின்றன.


குடல்களின் இயக்கங்கள் தடபுடலாக நடைபெறுவ துடன், அதனதன் இயற்கையான நடைமுறைகள் ஆரவாரத் துடன் செயல்படுத்தவும் படுகின்றன. இப்படியான சூழ் நிலையில், இயற்கையான செயல்பாடுகள், உறுப்புக்கள், மற்றும் திசுக்கள் யாவும் திடமான திடமிழந்து போவதால், உடல் இயக்கமானது தடை பட்டுத் தளர்ந்து போகவும்


செய்கிறது.


மூன்று நாட்கள் முடிந்தால்


உண்ணா விரதம் தொடங்கி 3 நாட்கள் முடிந்து, நான் காம் நாள் தொடங்கி, அதிலிருந்து 12 நாட்கள் வரை யிலும் தொடர்கிற போது, உடலின் வெப்பம் அதிகமாகிக் கொள்கிறது. கழிவுகளை வெளியேற்றும் காரியத்தை. மிகுதிப் படுத்த. வயிற்றுப் போக்கு போன்றவையும் ஏற். பட்டு விடுகிறது.