பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து இடக்கும் மனித சக்தி


இயங்க, உடலில் உள்ள உஷ்ணத்தை தணிந்து தடுக்க, உடல் தனக்குத்தானே முயற்சிகள் பல மேற் கொள்கிறது.


அதாவது உடலுக்கு உணவாக, தன்னுடைய திசுக் களைத் தானே எடுத்துக் கொண்டு, சக்தியை சேகரித்துக் கொள்கிறது. எப்படிப் பட்ட திசுக்களை என்று நாம்


தெரிந்து கொள்ே வாமே!


நோயுற்று நலிந்த திசுக்கள், பாதிக்கப் பட்டு பலமற்றுப் போன பலனில்லாத திசுக்கள், மற்றும் உடலுக்கு அதிக அத்யாவசியம் இல்லாத திசுக்கள் என்பதாக, அந்த விரத மிருக்கும் தேகம் தேர்ந்தெடுத்து எரித்து, தன் தேக சக்தி யைத் தக்க வைத்துக் கொள்கிறது.


இதனால், வேண்டப்படாத கொழுப்புப் பகுதிகள், ஊளைச் சதைகள், வெறுக்கும் காட்சியைத் தருகிற விரும்பப்படாத பகுதிகள் எல்லாமே இந்த விரத வெந் தணலில் வீழ்ந்து, உருகி, உருவிழந்து, ஒழிந்து போகின்றன.


ஈரல், கிட்னி, துரையீரல், தோல் போன்ற கழிவுப் பொருட்களை வெளியேற்றும் பணியைச் பெய்கின்ற முக்கிய *றுப்புக்கள் எல்லாம், மற்ற உறுப்புக்கள் எல்லாம், மேலும் மேலும் சுமை கூடிய பணியைச் செய்யும் பொறுப்பேற்கவும் நேர்கின்றன. ஆமாம். இவ்வாறு எரிந்து போய் கழிவாகிற பொருட்களை வெளியேற்றுகிற அதிகப்படியான சுமையை, இவைகள் சுமந்து தளர்ந்து கொள்ளத் தொடங்குகின்றன.


இவ்விதமாக, எப்பொழுதும் வெளியேறும் பொதுவான கழிவுப் பொருட்களுடன், மேலும் பல கழிவுப் பொருட்கள். சிறுநீர், வியர் வை, மற்றும் கரியமிலவாயு போன்றவைகளும் “இாைக உடலில் இருந்து வெளியேற்றப்படும் சூழ்நிலை ‘1’ அமைந்து விடுகிறது.