பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


பெண் களுக்கே J க்தியும் சாமர்த் தியமும் இல்லை என்கிற


போது, தாயாகி விட்டால்......


அந்த அற்பத்தனமான அபிப்ராயத்தைப் பல தாய்மார் கள் விரட்டியடித்து நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.


ஹாலந்து நாட்டின்ஒரு பெண்மணி, இரண்டு குழந்தை களுக்குத் தாய். 1948ம் ஆண்டு ஒலிம்பிக் பந்தயத்தில் 4 நிகழ்ச்சிகளில் போட்டியிட்டு வென்று, 4 தங்கப் பதக்கங் களை வென்றாள். அந்த நாட்டின் மகாராணியே வந்து வரவேற்றுப் புகழ்ந்ததாக வரலாறு.


தாய்மையின் வலிமைக்கு சான்றாகத் திகழ்ந்த அந்தப் பெண்மணியின் பெயர் பிளாங்கர்ஸ் கோயன்.


ஒலிம்பிக் கொடி


ஒலிம்பிக் கொடி வெள்ளை நிறம் உடையது. அதில் 5 வண்ண வளையங்கள் உண்டு.


ஒவ்வொரு வளையமும் ஒவ்வொரு நிறம் உடையது. அவை கறுப்பு, மஞ்சள். நீலம், பச்சை, சிவப்பு என்பன வாகும். அந்த 5 வளையங்களும் 5 கண்டங்களைக் குறிக் கின்றன.


நீல நிறம் -- ஐே ராப்பாவையும் மஞ்சள் நிறம் - ஆசியாவையும் கறுப்பு நிறம் - ஆப்பிரிக்காவை யும் பச்சை நிறம் - அமெரிக்காவை யும்


சிவப்பு நிறம் - ஆஸ் திரேலியாவையும்


குறித்துக் காட்டுகின்றன.