பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.36 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


நின்று கொண்டே உயரம் தாண்டும் போட்டி, நீளத் தாண்டும் போட்டிகளில் ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொண்டு பத்துத் தங்கப் பதக்கங்கள் வென்றான். மனிதத் தவளை என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்றான்.


உலகில் அவன் ஒப்பற்ற வீரனாக உயர்ந்தான். வரலாற்று வீரனாக பெருமை பெற்றான். நீங்களும் அந்த வீரனைப்போல் நிச்சயம் வரமுடியும்.


விடாத நோயும் விடாத முயற்சியும்


ஒரு பெற்றோர்க்கு 19 குழந்தைகள், அந்தச்சிறுமியோ 17 வது குழந்தை. அவர்களோ ஏழைகள், பிற்படுத்தப்பட்ட நீக்ரோ இனத்தினர்; அவர்களின் அழியாத சொத்து என்பது வறுமை தான். H


இந்த வறுமை நேரத்தில் 17வதாகப் பிறந்த பெண் குழந்தைக்கு விஷக் காய்ச்சல், குழந்தை இறந்துப்போகும் என்று கண்டவர்களும் கூறிவிட்டுப் போயினர்.


தாயோ அந்தக் குழந்தையை சாகவிடமாட்டேன் என்று சபதம் செய்தாள். வைத்திய வசதி அருகில் இல்லை யென்றாலும் தினம் 100 மைல்களுக்கு அப்பால் உள்ள மருத்துவமனைக்கு, ரயிலில் சென்று வைத்தியம் செய்து வந்தாள் முயற்சியை விடவே இல்லை.


பல ஆண்டுகள் கழிந்தன. பிழைத்துக்கொண்ட குழந்தை, இளம்பிள்ளை வாதத்தில் கைகால்களின் செயல் இழந்து, படுக்கையோடு படுக்கையாகக் கிடந்தது.


தாயின் சேவையும் மருந்தின் வலிமையும், குழந்தையை நிற்கவைத்தது. எட்டு வயதில் நிற்கத் தொடங்கிய குழந்தை 11 வயதில் நடக்கத் தொடங்கியது. அந்தச் சிறுமி விளை