பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


இழே காண்பவை எல்லாம் ‘ஒட்டம் கொடுக்கும் தஹட்டங்கள். கவனமாகப் படியுங்கள். ஒட்டம்’ என்னும் காமதேனுப் பசுவானது, கேட்பதையெல்லாம் தட்டாமல் தருகின்ற தனிப் பெருமையை, நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்.


பிறகு, நீங்களே உங்களையறியாமல் ஒடத் தொடங்கி விடுவீர்கள். இடையிலே ஒடி விடாமல், படித்து முடித்த பிறகு ஒடுங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.


1. இரத்த அழுத்தம் குறைகிறது.


நன்றாக ஒடும்போது, இரத்த ஒட்டம் விரிவடைகிறது. வேகம் பெறுகிறது. அதனால் அதிக இரத்த ஒட்டம் பெறு கிற இரத்தக் குழாய்கள் விரிவடைகிறது. பெரிதாகிறது. இரத்தம் ஒடும் வழி தங்கு தடையில்லாமல் அமைவதால், அங்கே இரத்த அழுத்தத்திற்கான சூழ்நிலை குறைகிறது.


புல்லடர்ந்த வாய்க்காலில் தண்ணிர் தேங்கித் தேங்கித் தான் ஒடும் அதுபோல, கொழுப்பு அடைத் திருக்கும் இரத்தக் குழாய்கள், அகலத்தில் சுருங்கிப் போவதால், இரத்தமும் தயங்கி ஒடும். அதனால் இரத்த அழுத்த நோய் ஏற்படுகிறது. அந்த நோய் வராமல் ஒட்டம் உதவுகிறது.


2. இரத்த அழுத்தம் குறைகிறது.


இரத்தத்தில் உள்ள இரத்த செல்கள் எண்ணிக்கையில் அதிகமாகின்றன. இரத்தத்தின் நிறம் காட்டும் ஹீமோ குளோபின் அதிகமாகிறது. பிளாஸ்மா என்ற இரத்தப் பகுதி மேலும் அதிகமாகிறது. ஆகவே, இரத்தத்தின் தரம் மிகுதியாகி, தேகத்தை மேன்மைபடுத்துகிறது.