பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


உள்ளன. அவைகளுக்கு வேகமாக இயங்கும் தசைநார்கள் (Fast - Twitch Fibers) என்று பெயர்.


ஒரு ஒட்டக்காரர் வேகமாக ஒடுகிற பொழுது, அவருடைய எல்லா தசைகளுமே இயங்கி, அவருக்கு வேக மாக ஒட உதவுவதில்லை. வேகமாக இயங்கும் தசைநார் களே அதிகமாக உழைத்து அவருக்கு உதவுகின்றன.


ஏன் அப்படி?


எந்த ஒட்டத்திலும் விளையாட்டிலும் ஈடுபடாத சாதாரண மனிதர்களுக்கு, பாதித் தசைநார்கள் மெதுவாக இயங்கும் தன்மையிலும் மீதித் தசைநார்கள் இன்னும் மெது வாக இயங்கும் தன்மையிலும், அமைந்து விடுகின்றன. அதனால் தான், அவர்களால் அதிவேகமாக எந்த வேலை யையும் செய்ய முடிவதில்லை. * *


உலகமகா ஒட்டக்காரர்களுக்கும் கூட, அவர்கள் ஒடுகின்ற வேகத்தையும், தூரத்தையும் பொறுத்தே, குறிப் பிட்டத் தசைகள் இயங்குகின்றன என்பதையும் ஆய்வறிஞர் கன் கண்டு பிடித்துக் கூறியிருக்கின்றனர். 1.


உதாரணம் : நீண்டதுாரம் ஒடுகிற மாரத்தான் ஒட்டக் காரர்களுக்கு, 85%க்கு மேல் மெதுவாக இயங்கும் தசைநார் கள் வேலை செய்கின்றன என்றும்; குறைந்த தூரம் ஒடுகிற விரைவோட்டக்காரர்களுக்கு (Sprinters) 65%க்கு மேல் வேக மாக இயங்கும் தசைநார்கள் வேலை செய்கின்றன என்றும் கூறுகின்றார்கள்.


இப்படி வேகமாகவும் மெதுவாகவும் இயங்குகின்ற தசை நார்கள், பரம்பரைத் தொடர்பாக பாதியும், சிறப்புப்பயிற்சி