பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி

49



தளைச் செய்யும்போது பாதியுமாக உருவாகின்றன என்ப


தாகவும் கூறுகின்றார்கள்.


வேகமாக இயங்கும் தசைநார்கள்


வேகமாக இயங்கும் தசைநார்கள், பெரிய அகலமான தசைநார்களை உடையவை விரைவாக நீண்டு, சுருங்குகின்ற ஆற்றல் நிறைந்தவை. அதாவது ஒரு நொடிக்குள்ளே 49 முதல் 90 ஆயிரம் நொடித் துகள்களுக்குள் இந்தத் தசை நார்கள் நீண்டு சுருங்கி விடும் ஆற்றலைப்பெற்றிருக்கின்றன.


இப்படி வேகமாக இயங்கி, நீண்டு விரிந்து சுருங்கும் தசைநார்களுக்கு, உணவு சக்தி (Fuel) எங்கிருந்து எப்படி கிடைக்கிறது?


ஒவ்வொரு நொடியும் இந்தத் தசைநார்கள் ஏராளமான சக்தியை (Energy) எரித்து வெளியாக்குகின்றன. தசைகளில் உள்ள சக்தியைத் தேக்கிவைத்திருக்கும் குழாய்கள், தேவை யான சக்தியைத் தருவதற்கு உதவுகின்றன. மிகுதியான சக்தி வேண்டியிருப்பதால், தசைகளில் உள்ள சக்தி போது மானதாக இல்லாமல், பற்றாக் குறை பெற்றுவிடுகிறது. அந்த சமயத்தில், வேகமாக இயங்கும் தசைநார்களே அந்த சக்தியை தற்காலிகமாக உண்டு பண்ணி, தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. அந்த சக்தி தரும் பொருளின் பெயர் அடினோசின் டிரைபாஸ்பேட் (Adenosine-TriPhos Phate). -


மூன்று வகை உற்பத்தி மண்டலம்.


வேகமாக ஒட உதவுகிற திடீர் சக்தியை தசைநார்களில் உற்பத்தி செய்ய மூன்று வகை மண்டலங்கள் (mechanism) உதவுகின்றன.