பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



நிறைய ஆடைகளை வைத்துக் கொண்டு, ஒருவன் நிர்வாணமாக வாழ்ந்தால், அவன் பைத்தியக்காரன் தானே!


ஒடுகிற காரில் ஏறிக் கொள்ளாமல், பின்னால் நின்று தள்ளுகிறவனை பேதை என்றும் கூறலாமல்லவா!


விளையாட்டும் படிப்பும் :


விளையாட்டு என்றால் அனுபவம். அனுபவம் என்றால் அறிவு. அறிவுதான் படிப்பு. விளையாட்டானது வாழ்க்கைப் படிப்பையே மிகுதியாக வழங்குகிறது.


உலகில் தலை சிறந்த விளையாட்டு வீரர்கள், உன்னத மேதைகளாகத் திகழ்வதை, சரித்திரம் சாற்றி மகிழ்கிறது.