பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. உடற் பயிற்சியா! என்ன அது?


மனிதர்களின் மறதி


உழைக்கப் பிறந்தது தான் நமது உடல்.


உழைக்க உழைக்க உறுப்புக்கள் உறுதியடைகின்றன.


உள்ளம் விரிவடைகிறது. மகிழ்வடைகிறது.


உழைப்பை மனித இனம் மறக்கத் தொடங்கிய நாட் கள். மனிதர்கள் மகிழ்ச்சியைத் தொலைத்து விட்ட நாட்க ளாகும்.


உழைப்புக்கு பதில் மனித மனத்தில் மதர்ப்பு குடி கொண்டு விட்டது. உழைப்பை வெறுக்கத் தொடங்கிய மக்களிடையே நலிவுகள் நிறைந்தன. நலங்கள் குறைந்தன. பலமும் பறிபோயின.


புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட எந்திரங்களை மக்கள் நம்பியது, பயன் படுத்தியது தவறேயல்ல. அந்த மக்கள் எந்திரங்களை வைத்து, தங்களை எந்திர மனிதர்களாக மாற்றிக் கொண்டது முதல் தவறு.